ஃபோர்டு மோட்டார் நிறுவனம் உலகளவில் 6,34,000 எஸ்யுவி வாகனங்களை திரும்ப பெறுகிறது; காரணம் இதுதான்!!

By Dhanalakshmi G  |  First Published Nov 25, 2022, 10:37 AM IST

ஃபோர்டு மோட்டார் நிறுவனம் உலகளவில் 6,34,000 எஸ்யுவி வாகனங்களை திரும்பப் பெறுகிறது. எரிபொருள் செலுத்தப்படும் இன்ஜெக்டரில் வெடிப்பு ஏற்பட்டு இருப்பதால், எஞ்சினுக்குள் எரிபொருள் செலுத்தும்போது கசிந்து தீ பிடிக்கலாம் என்பதால், திரும்ப பெறுவதற்கு முடிவு செய்து இருக்கிறது.


2020 முதல் 2023 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட ப்ரோங்கோ ஸ்போர்ட் மற்றும் எஸ்கேப் எஸ்யுவி மாடல் வாகனங்களை திரும்பப் பெறுகிறது. இவை அனைத்திலும், 1.5 லிட்டர் என மூன்று சிலிண்டர் என்ஜின்கள் உள்ளன.

இதுகுறித்து, டியர்போர்ன், மிச்சிகன், வாகன உற்பத்தியாளர் வியாழக்கிழமை கூறுகையில், ''உரிமையாளர்கள் வாகனங்களை ஓட்டுவதை நிறுத்தவோ அல்லது பூங்கா போன்ற இடங்களில் நிறுத்துவதையோ பரிந்துரைக்கவில்லை. ஏனெனில் தீ அரிதான நிகழ்வாக இருக்கலாம். பொதுவாக எஞ்சின் ஆப் செய்யப்பட்டு இருக்கும்போது தீ பிடிக்க வாய்ப்பில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos

undefined

ஆனால் ஃபோர்டு நிறுவனம், இதுவரை 20 தீ விபத்துகள் நடந்து இருப்பதாகவும், அதுகுறித்த தகவல்களை பெற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. என்ஜின்கள் அணைக்கப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குள் இந்த தீ விபத்து நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் நான்கு பேருக்கு தீக் காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் 43 சட்டப்பூர்வ சிக்கல்களும் ஃபோர்டு நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Single Name Passport UAE: பாஸ்போர்டில் ஒற்றைப் பெயர்தான் இருப்பவர்கள் கவனத்திற்கு ! UAE செல்லத் தடை!

பழுதுபார்ப்பு குறித்து இன்னும் கண்டறியவில்லை. அறிந்தவுடன், உரிமையாளர்கள் விருப்பமான டீலர்களுடன் தொடர்பு கொண்டு பழுதை சரி செய்து கொள்ளலாம் என்று ஃபோர்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு நிர்வாக இயக்குனர் ஜிம் அசோஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். டிசம்பர் 19ஆம் தேதி இதுகுறித்த தகவல் வாகன உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் இன்ஜெக்டரில் பழுது இருந்தால் சரி செய்து கொடுக்கப்படும். அப்படி இல்லையென்றால், பின்னர் நிகழ்ந்தாலும் சரி செய்து கொள்ளும் வகையில், 15 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏரிபொருள் செலுத்தும் இன்ஜெக்டர் மாற்றப்படாது என்றும், இதனால் ஏற்பட்ட பழுது சதவீதம் மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளது. எரிபொருள் கசிவு விகிதம் 2020 மாடல்களில் 0.38% மற்றும் 2021 முதல் 2022 வரையிலான மாடல்களில் 0.22% பழுது ஏற்பட்டு இருக்கிறது என்று ஃபோர்டு தெரிவித்துள்ளது. 

தலை முதல் பாதம் வரை உடல்முழுவது டாட்டூ... தலை சுற்ற வைக்கும் ஏலியன் ஜோடி!!

click me!