தலை முதல் பாதம் வரை உடல்முழுவது டாட்டூ... தலை சுற்ற வைக்கும் ஏலியன் ஜோடி!!

By Narendran SFirst Published Nov 24, 2022, 4:56 PM IST
Highlights

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க ஏலியன் போல் தங்களது தொற்றத்தை மாற்றிக்கொண்ட ஜோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க ஏலியன் போல் தங்களது தொற்றத்தை மாற்றிக்கொண்ட ஜோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்பெல்லாம் பச்சை குத்துவது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது அனைவரும் ஃபேஷன் என்ற பெயரில் வித்தியாச வித்தியாசமாக பச்சை குத்தி கொள்கின்றனர். அந்த வகையில் ஒரு ஜோடி கின்னஸ் புக்கில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் உடல் முழுவதும் பச்சை குத்தியதோடு உடல் பாகங்களிலும் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளனர். மேலும் அவர்களை பார்க்கையில் தலை சுற்றுகிறது என்று பலர் கூறிவருகின்றனர். கின்னஸ் புத்தகத்தில் பெயர் பதிவு செய்யப்பட்ட அத்தகைய ஜோடி ஏலியன் போல் காட்சி அளிக்கின்றனர். 

இதையும் படிங்க: சீனாவில் 12 நாட்கள் ஒரே இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வட்டமாக சுற்றி வந்த செம்மறி ஆடுகள்; என்ன காரணம்?

அர்ஜென்டினாவில் வசிக்கும் கேப்ரியேலா பெரால்டா மற்றும் விக்டர் ஹ்யூகோ பெரால்டா தம்பதியினர், அதிக உடல் மாற்றங்களை செய்து சாதனை படைத்துள்ளனர். பச்சை குத்துவதையும் உடலில் மாற்றங்கள் செய்வதையும் விரும்பும்m இந்த ஜோடி இதுவரை தங்கள் உடலில் 98 மாற்றங்களைச் செய்துள்ளனர். இந்த ஜோடி கண்களிலும் பச்சை குத்தியுள்ளனர். அதே நேரத்தில், உடலில் 50 துளைகள் போட்டு அதில் ஸ்டட் போட்டுள்ளனர். இதுக்குறித்த வீடியோவில், 8 மைக்ரோடெர்மல், 14 உடல் உள்வைப்புகள், 5 பல் உள்வைப்புகள், காதுகள் தொடர்பான 4 அறுவை சிகிச்சைகள், 2 காது போல்ட் மற்றும் நாக்கு ஆகியவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை காணலாம். 

இதையும் படிங்க: பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அசிம் முனீர் தேர்வு; இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

இத்தனை உடல் மாற்றங்களுக்குப் பிறகும் அவர்கள் இவ்வுலகைச் சேர்ந்தவராகத் தெரியவில்லை என்றும் பெரும்பாலான மக்கள் அவர்களைக் கண்டு அச்சம் கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்களை நரகத்தை சேர்ந்தவர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். ஆனால் மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அந்த தம்பதிகள் கவலைப்படுவதில்லை. இதுக்குறித்து உலக சாதனை படைத்த விக்டர் ஹ்யூகோ, வாழ்க்கையை அனுபவியுங்கள், கலையை ரசியுங்கள். பச்சை குத்துவது உங்களை நல்லவராகவோ கெட்டவராகவோ மாற்றாது. அது ஒரு கலை மட்டுமே. சிலர் பாராட்டுவார்கள், சிலர் பாராட்ட மாட்டார்கள் என்றார். 

click me!