Single Name Passport UAE: பாஸ்போர்டில் ஒற்றைப் பெயர்தான் இருப்பவர்கள் கவனத்திற்கு ! UAE செல்லத் தடை!

By Pothy Raj  |  First Published Nov 25, 2022, 9:35 AM IST

உங்கள் பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் மட்டும் இருந்தால், கண்டிப்பாக நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள்(UAE) செல்ல முடியாது. 


உங்கள் பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் மட்டும் இருந்தால், கண்டிப்பாக நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள்(UAE) செல்ல முடியாது. 

பாஸ்போர்ட்டில் முதல் பெயர் மற்றும் 2ம் பெயர் இருப்பவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

Tap to resize

Latest Videos

உதாரணமாக பிரவீண் என்ற ஒற்றைப் பெயர் இருந்தால் அனுமதி இல்லை. மாறாக பிரவீண் என்பது குடும்ப பெயராகக் கருதப்பட்டு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். அதேநேரம், சர்நேம் எனச் சொல்லக்கூடிய துணைப் பெயர் குமார் என்று சேர்க்கப்பட்டு பிரவீண் குமார் என்றும், குமார் என்பது குடும்ப பெயராகவும், பிரவீண் என்பது இயற்பெயராகவும் இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

NPS Scheme: மாதம் ரூ.4,000சேமிப்பு! ஓய்வுகாலத்தில் ரூ.ஒரு கோடி, ரூ.35,000 பென்ஷன்:திட்டம் பற்றி தெரியுமா?

இது குறித்து ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிவிப்பில் “ ஐக்கிய அரபு அமீரக விதிப்படி, பாஸ்போர்ட்டில் சிங்கிள் நேம் மற்றும் அதாவது ஒற்றை வார்த்தையில் பெயர் இருப்பவர்கள், குடும்ப பெயர் வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் செல்ல முடியாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒற்றை வார்த்தையில் பெயர் வைத்திருக்கும் பயணிகளுக்கு விசா வழங்கப்படாது, ஒருவேளை இந்த விதிமுறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பே விசா வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

LIC-யின் இரு முக்கியமான பாலிசிகள் சந்தையிலிருந்து வாபஸ்! பாலிசிதாரர்களுக்கு பலன்கள் கிடைக்குமா?

ஏர் இந்தியா நிறுவனம் ட்விட்டரில் நேற்று பதிவிட்ட கருத்தில் “ ஐக்கியஅரபு அமீரக அதிகாரிகள் உத்தரவின்படி, பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் வைத்து சுற்றுலா விசா வைத்திருந்தாலும், அல்லது வேறு பணிக்காக ஐக்கிய அரபு அமீரகம் வர இருந்தாலும் அந்தப் பயணி அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த புதிய விதிமுறை ஐக்கிய அரபுஅமீரகத்தில் குடியேற்றஅனுமதி பெற்றவர்கள், வேலைபார்க்கும் அனுமதி பெற்றவர்களுக்குப் பொருந்தாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், ஐக்கிய அரபு அமீரகம் வந்து விசா பெறுபவர்கள், வேலை மற்றும் தற்காலிக விசா பெறுபவர்களுக்கு மட்டும் பொருந்தும்
 

click me!