பாலஸ்தீன ஹமாஸ் குழுவின் தாக்குதலில் 300 பேர் சாவு! காசாவில் இஸ்ரேலின் பதிலடியில் 230 பேர் பலி!

By SG Balan  |  First Published Oct 8, 2023, 7:59 AM IST

நீண்ட மற்றும் கடினமான போரை இஸ்ரேல் தொடங்குவதாகவும், இலக்குகளை அடையும் வரை இந்தப் போர் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை கூறியிருக்கிறார்.


பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் சனிக்கிழமை காலை தொடங்கிய வரலாறு காணாத தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஆபரேஷன் அயர்ன் ஸ்வாட்ஸ் என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதில் காசா மற்றும் மேற்கு எல்லைப் பகுதியில் 230 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, ஸ்டெரோட் மற்றும் கிப்புட்ஸ் நிர் ஆம் போன்ற பகுதிகளில் ராக்கெட் சைரன்கள் ஒலித்த வண்ணம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Videos

undefined

காசா மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் தொடர்ந்தது. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசாவில் உள்ள மக்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாகவும் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பாலஸ்தீன போராளிகளின் அட்டூழியம்.. அரை நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலிய பெண்ணின் உடல் - கொடுமையின் உச்சம்

ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய இதுவரை காணாத இந்த மிகப்பெரிய தாக்குதலில் இஸ்ரேலில் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காசா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளில் சுமார் 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குக் கரைப் பகுதியிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன. இஸ்ரேல் நடத்திய ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்ஸ் நடவடிக்கையில் குறைந்தது 1,700 பேர் காயமடைந்தனர்.

காசா நகரின் மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த மையப் பகுதியில் சனிக்கிழமை இரவிலும் பல இடங்கள் கடுமையான குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

நீண்ட மற்றும் கடினமான போரை இஸ்ரேல் தொடங்குவதாகவும், இலக்குகளை அடையும் வரை இந்தப் போர் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை கூறியிருக்கிறார்.

மூண்டது போர்.. பாலஸ்தீனை தாக்க இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா - ஹமாஸ் உயர்மட்ட தலைவர் யாஹா சின்வர் கொலை!

"ஹமாஸின் கொலைவெறித் தாக்குதலால் எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது. எங்கள் எல்லைக்குள் ஊடுருவிய பெரும்பாலான எதிரிப் படைகளை அழித்து முதல் கட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில், இலக்குகளை அடையும் வரை ஓய்வு இல்லாமல் எங்கள் தாக்குதல் தொடரும். நாங்கள் இஸ்ரேல் குடிமக்களுக்கு பாதுகாப்பை மீட்டெடுப்போம். நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று நெதன்யாகு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதல் பாலஸ்தீனியர்களின் "தற்காப்பு நடவடிக்கை" என்று கூறி, ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஆதரித்துள்ளது. மேலும் முஸ்லிம் நாடுகளின் உரிமைகளை ஆதரிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தயாராக இருப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையேயான சண்டை குறித்து விவாதிக்க துருக்கி வெளியுறவு அமைச்சர் தனது சகாக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் கடும் மோதல் : ” இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கும்..” பிரதமர் மோடி ட்வீட்

click me!