ஒரே நாளில் 2000 பேருக்கு கொரோனா.. எச்சரிக்கும் MOH - சிங்கப்பூரில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

Ansgar R |  
Published : Oct 07, 2023, 07:31 PM IST
ஒரே நாளில் 2000 பேருக்கு கொரோனா.. எச்சரிக்கும் MOH - சிங்கப்பூரில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

சுருக்கம்

Singapore : சிங்கப்பூர் தற்போது மற்றொரு பெருந்தொற்று அலையை சந்தித்து வருகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று அக்டோபர் 6ம் வெளியிட்ட அறிக்கையில் மக்களை எச்சரித்துள்ளார். இதனால், வரும் வாரங்களில் மேலும் பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மனநலக் கழகத்தில் மறுவாழ்வு மையம் மற்றும் அமைதி மையத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் பேசிய சுகாதாரத் துறை ஓங் இதனை தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அமைச்சரின் இந்த பதிவால், சிங்கப்பூரில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மனதில் உதித்துள்ளது என்றே கூறலாம்.

மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு மதிப்பிடப்பட்ட வழக்குகள், மூன்று வாரங்களுக்கு முன்பு சுமார் 1,000மாக  இருந்து வந்தது. ஆனால் பயமுறுத்தும் விதமாக கடந்த இரண்டு வாரங்களில் அது 2,000மாக உயர்ந்துள்ளது, என்று அமைச்சர் ஓங் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

இருப்பினும், மார்ச் முதல் ஏப்ரல் வரை ஏற்பட்ட கடைசி அலையைப் போலவே, எந்த சமூகக் கட்டுப்பாடுகளையும் விதிக்க எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் உறுதிபட கூறினார். இந்த வழக்குகள் பெரும்பாலும் எக்ஸ்பிபி ஓமிக்ரான் மாறுபாட்டின் இரண்டு வழித்தோன்றல்களைக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் விளக்கமளித்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்போதைய தடுப்பூசிகள், கோவிட்-19 வகைகளுக்கு எதிராக நன்றாக வேலை செய்வதாக நிரூபிக்கப்பட்டாலும், காலப்போக்கில் பாதுகாப்பு குறையும் என்று அமைச்சர் ஓங் சுட்டிக்காட்டினார்.
தொற்றுநோய் நெருக்கடிக்குப் பிறகு வைரஸ் லேசானதாக மாறவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"கடந்த ஏப்ரலில் சிங்கப்பூரின் கடைசி நோய்த்தொற்று எழுச்சியின் போது ஆவணப்படுத்தப்பட்ட கடுமையான நோய் விகிதங்களை எடுத்துக்காட்டிய சுகாதார அமைச்சகத்தின் (MOH) ஆய்வின் கண்டுபிடிப்புகளையும் ஓங் மேற்கோள் காட்டினார்.

அமெரிக்கா.. வீட்டிற்குள் நான்கு உடல்கள்.. இறந்தவர்கள் இந்திய வம்சாவளியினர் என்று கண்டுபிடிப்பு - என்ன நடந்தது?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு