மூண்டது போர்.. பாலஸ்தீனை தாக்க இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா - ஹமாஸ் உயர்மட்ட தலைவர் யாஹா சின்வர் கொலை!

By Ansgar R  |  First Published Oct 7, 2023, 11:00 PM IST

இன்று ஏவுகணை கொண்டு இஸ்ரேல் நாட்டை, பாலஸ்தீனிய போராளிகள் தாக்கிய நிலையில், அதில் 22 பேர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் பல கொடூரமான சம்பவங்களை தொடர்ச்சியாக பாலஸ்தீனிய போராளிகள் அரங்கேற்றி வருவதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றது. 


இந்நிலையில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 5000த்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி குண்டு மழை பொழிந்த நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது. இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

"நாம் தற்போது போர்களத்தில் உள்ளோம், நிச்சயம் வெல்வோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்களுக்கு (ஹமாஸ் பாலஸ்தீன்) பதிலடி கொடுக்கப்படும்” என வீடியோ வெளியிட்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் இஸ்ரேல் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இதனால் அந்நாடு முழுவதும் ஒரு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

பதற்ற பூமியான இஸ்ரேல்.. தமிழர்கள் யாரேனும் சிக்கியுள்ளார்களா? - உதவிக்கு அழைத்திட எண்களை வெளியிட்ட தமிழக அரசு!

பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலைத் தாக்கிய பிறகு, அங்குள்ள மக்களை பிணைக் கைதிகளாகக் கொண்டுசெல்வதாக கூறப்படுகிறது. அதே போல இறந்த பொதுமக்களின் உடல்களை டிரக்களில் நகரம் முழுவதும் ஊர்வலாமாக எடுத்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடுமைகள் குறித்த பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த இக்கட்டான சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், சுமார் 8 மில்லியன் மதிப்பிலான அவரச ராணுவ உதவி பொதிகளை இஸ்ரேல் நாட்டிற்க்கு வழங்கியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. 

பாலஸ்தீன் படைகள் இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய பிறகு, ஒரு திறந்த டிரக்கில், இஸ்ரேலிய பெண்ணின் அரை நிர்வாண சடலத்தை எடுத்துக்கொண்டு, நகரத்தில் அணிவகுத்துச் செல்லும் கொடூரமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இது உலகம் முழுவதும் பெரும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 

HUGE - Hamas top leader Yayha Sinwar killed in Israel Defence Force airstrikes in Gaza. Massive bomb@rdment on Gaza continues.

Israel is likely to launch biggest ever action on Gaza tonight. America offers ballistic missiles to Israel🔥🔥 Countdown begins for biggest phase of… pic.twitter.com/J1u9n9zeIF

— Times Algebra (@TimesAlgebraIND)

இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் உயர்மட்டத் தலைவர் யய்ஹா சின்வார் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. காஸா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் இன்று இரவு காஸா மீது மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்குகிறது. இன்று இரவு ஆபரேஷன் IRON SWORDக்கான கவுண்டவுன் தொடங்குகிறது.

பாலஸ்தீன போராளிகளின் அட்டூழியம்.. அரை நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலிய பெண்ணின் உடல் - கொடுமையின் உச்சம்

click me!