ஆபாச படங்களில் நடித்து நான் பல மில்லியன் டாலர் சம்பாதித்து உள்ளதாக ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் 12,000 அமெரிக்க டாலர் மட்டுமே நான் சம்பாதித்தேன் என மியா கலிஃபா தெரிவித்துள்ளார்.
ஆபாச படங்களில் நடித்து நான் பல மில்லியன் டாலர் சம்பாதித்து உள்ளதாக ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் 12,000 அமெரிக்க டாலர் மட்டுமே நான் சம்பாதித்தேன் என மியா கலிஃபா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு மிகவும் புகழ் பெற்றவர் மியா கலிஃபா. அந்த அளவிற்கு ஆபாச திரைப்படத்துறையில் கொடிகட்டி பறந்தவர். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். மியா கலிஃபா பார்ன் துறையில் நுழைந்த போது அவரை பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால், 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர், லெபனான் - அமெரிக்கா குடும்பத்தைச் சேர்ந்த மியா கலிஃபா அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஹிஜாப் அணிந்து நடிப்பது அவர்களை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததன் பிறகு, மியா கலிஃபா உலகம் முழுவதும் பிரபலமானார்.
எனினும், 2014-ம் ஆண்டு இத்துறைக்குள் நுழைந்த மியா கலிஃபா, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரால் மிரட்டப்பட்ட மூன்று மாதங்களில், 2015-ம் ஆண்டே அந்த துறையில் விலகிவிட்டார். அத்துறையில் இருந்து விலகி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் பிரபல நடிகை என்ற பட்டியலில் இருந்து வருகிறார். இந்த துறையில் இருந்து விலகிய பின் முதன் முறையாக அவரது முன்பகுதி வாழ்க்கை குறித்தும், பார்ன் துறையில் இருந்து விலகிய பின் அவரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்தும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு மியா கலிஃபா முதன் முதலாக பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், “மக்கள் நான் இந்த துறையில் நடித்ததன் மூலம் கோடி கோடியாக சம்பாதித்துள்ளேன் என்று நினைக்கிறார்கள். ஆனால், நான் மொத்தமாக அந்த துறையில் சம்பாதித்தது 12,000 டாலர்தான். அந்த துறையை விட்டுவிட்டு வேறு வேலை தேடியபோது மிகவும் சிரமப்பட்டேன்”என்று கூறியுள்ளார்.
மேலும், “நான் சிறிதுகாலம்தான் இத்துறையில் பணியாற்றினேன் ஆனால் காட்டுத்தீயாக என்னுடைய செயல்கள் பரவியிருக்கின்றன. நான் விலகிய பின்னும் ஐந்து வருடங்கள் முதலிடத்தை பிடித்திருக்கிறேன். இதனால் தான் பலர் நான் இப்போதும் பார்ன் துறையில் இருப்பதாக நினைக்கிறார்கள் என மியா கலிஃபா கூறியுள்ளார்.