பாகிஸ்தானை அத்துவிட்ட சீனா... ஸ்கெட்ச் போட்டு மடக்கிய ஜெய் சங்கர்.. இப்படியொரு திடீர் திருப்பமா..?

By Thiraviaraj RM  |  First Published Aug 14, 2019, 4:49 PM IST

இந்தியா- சீனாவுக்கு இடையேயான உறவுகள் பரஸ்பர கவலைகளை மதிப்பதாகவும், வேறுபாடுகளை நிர்வகிப்பதாகவும் இருக்க வேண்டும். இருதரப்பு உறவுகள் அரசியலைக் கடந்தது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


இந்தியா- சீனாவுக்கு இடையேயான உறவுகள் பரஸ்பர கவலைகளை மதிப்பதாகவும், வேறுபாடுகளை நிர்வகிப்பதாகவும் இருக்க வேண்டும். இருதரப்பு உறவுகள் அரசியலைக் கடந்தது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சீனாவில் உள்ள பீஜிங் சென்றிருந்தார். அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  

Latest Videos

இது குறித்து பேசிய அவர், ‘’பரிமாணம் அடைந்திருப்பதால் இந்தியாவும், சீனாவும் உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய தொடர்பு படுத்தல்களையும் ஒருங்கிணைந்த அணுகுமுறையையும் வளர்த்தெடுக்க வேண்டும். இருநாடுகளும் தங்கள் பரஸ்பர முக்கிய அக்கறைகளை மதிக்க வேண்டும், வேறுபாடுகளை நிர்வகிக்க வழிமுறைகளைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். இருதரப்பு உறவுகளை ராஜ்ஜிய அளவுகோல்களை கவனத்தில் நிறுத்திக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

இருநாடுகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்று பிணைப்பு உள்ளது. இந்தியா, சீனா நாகரீகங்கள் மிகவும் தொன்மையானவை. இந்தியா, சீனா பண்பாடு மற்றும் நாகரீகங்கள் இருநாடுகளையும் எப்படி தாக்கம் செலுத்தின என்பதை இருநாட்டு இளம் சமுதாயத்தினர் இன்னும் உணரவில்லை. ஆகவே பண்பாட்டு பரிமாற்றங்கள் மூலம் இருநாட்டு வரலாறு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியம் உள்ளது. இது இரண்டு நாடுகளின் முக்கியமான கடமை.

இருதரப்பு உறவை குறுகிய வட்டத்தில் இருந்து நகர்த்தி, பரந்துபட்ட சமூக அளவிலான மாற்றமாக கொண்டு செல்லவேண்டும். இருநாட்டு மக்களும் முகத்துக்கு முகம் நேரடியாக கலந்துரையாடத் தொடங்கினால் பரஸ்பர உறவாடலில் புதிய அர்த்தம் வளரும். வெகுஜன ஆதரவை கட்டமைப்பது நம் உறவின் முக்கியத்துவமான ஒரு காரியம். நம் இருநாட்டு மக்களும் ஒருவரையொருவர் நல்ல முறையில் உணர வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் பதவியேற்ற பிறகு சீனாவுக்கு முதல் முறையாக மேற்கொண்ட பயணம் இது. முன்னதாக சீனாவுக்கான இந்திய தூதராக 2009 முதல் 2013 வரை ஜெய்சங்கர் இருந்துள்ளார்.
 

click me!