ஜிஹாத் குழுக்களை ஏவி பாகிஸ்தான் பகிரங்க மிரட்டல்... இந்தியா மீது அடங்காத வெறித்தனம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 14, 2019, 5:51 PM IST
Highlights

காஷ்மீர் சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் செயல்படும் என்று வெளிப்படையாக பாகிஸ்தான் ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் செயல்படும் என்று வெளிப்படையாக பாகிஸ்தான் ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்தது முதல் பாகிஸ்தான் கடும் கோபத்தில் இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளை தலையிடச் செய்து, இந்தியாவை அடிபணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல செயல்பட்டு வருகிறது. சீனாவை அழைத்தது, அமெரிக்காவை அழைத்தது, இஸ்லாமிய நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பாகிஸ்தானின் வேண்டுகோளை யாரும் ஏற்கவில்லை. இதனால் மேலும் கோபமடைந்த பாகிஸ்தான் என்ன செய்வது என்று தெரியாமல், பல தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. 

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்து வருகிறது. இந்த பயங்கரவாதிகளை காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அனுப்பி, தாக்குதல் நடத்தவும், அமைதி சீர்குலைக்கவும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் செயல்பட்டு வருகிறது என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், பாகிஸ்தானில் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழா இஸ்லாமாபாத்தில் உள்ள ஜின்னா கன்வென்ஷன் சென்டரில் நடந்தபோது கொடி ஏற்றும் விழாவில் உரையாற்றிய, அந்நாட்டு ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி, ‘’இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் குழுக்கள் செயல்படும். சிம்லா ஒப்பந்தத்தை இந்தியா மீறியுள்ளது.

இதனால், இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் இருக்க முடியும். காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவி செய்யும். நாங்கள் அவர்களை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிட மாட்டோம். காஷ்மீரிகள் எங்கள் மக்கள், அவர்களின் வலியை எங்கள் வலியாக நாங்கள் கருதுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்’’ என அவர் தெரிவித்தார். அவரது இந்தப்பேச்சு இந்தியாவை கொதிப்படையச் செய்திருக்கிறது. 

click me!