பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதன் முக்கியத்துவம் என்ன? அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதிகள் கருத்து

By SG Balan  |  First Published Jun 15, 2023, 1:15 PM IST

அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முக்கியத்துவம் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.


ஜூன் மாதம் அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தனது முதல் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். ஜூன் 22 அன்று அமெரிக்க அதிபருடன் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அரசு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பயணத்தின்போது அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் நரேந்திர மோடி பெற உள்ளார்.

இந்தப் பயணத்தின்போது புதிதாக பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்வது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. டிரோன்களை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் போடுவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதைப்பற்றி இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

I’m excited to welcome Prime Minister Modi to our nation’s Capitol next week. The US - India relationship is one of the most important in the world. pic.twitter.com/xnagPAGkyQ

— Buddy Carter (@RepBuddyCarter)

"அடுத்த வாரம் நம் நாட்டுக்கு வரும் இந்தியப் பிரதமர் மோடியை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவு உலக அளவில் மிக முக்கியமான ஒன்று" ஜார்ஜியாவைச் சேர்ந்த பட்டி கார்டர் கூறியிருக்கிறார். "அமெரிக்க காங்கிரஸில் பிரதமர் மோடி ஆற்றும் உரையை எதிர்நோக்கி இருக்கிறோம். அது மிக முக்கியமானது" என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஷீலா ஜாக்சன் லீ கருத்து தெரிவித்துள்ளார்.

"பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பலரும் உணரவில்லை. சீனாவுக்கு நிகராக தொழில்துறை உற்பத்தித் திறன் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. குறிப்பாக, உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் இந்தியா போன்ற கூட்டாளியின் நட்புதான் அமெரிக்காவுக்குத் தேவை" என்று ஜார்ஜியாவைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ரிச்சர்ட் மெக்கார்மிக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில் பிரிடேட்டர் டிரோன்கள் வாங்க திட்டம்

மோடி பிரதமரான பிறகு பல முறை அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். ஆனால் அவை பெரும்பாலும் உத்தியோகபூர்வமான பயணங்களாக இருந்தன. இதற்கு முன் நவம்பர் 2009 இல் அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அப்போது அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் அவருக்கு  விருந்தளித்தார்.

அதற்குப் பின் 2022ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடர் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரானை அரசுமுறைப் பயணமாக வரவேற்று விருந்தளித்தார். அதுவே பைடன் பதவியேற்றதும் வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்த ஒரே அரசு விருந்து ஆகும். அதனை அடுத்து பிரதமர் மோடியின் பயணம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான மற்றும் நெருக்கமான நட்பின் பிணைப்பை உறுதிப்படுத்துவதாக அமைய உள்ளது.

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 103 பேர் பலி! சிறிய படகில் 300 பேர் ஏறியதால் விபரீதம்

click me!