ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயதான கொந்தம் தேஜஸ்வினி என்ற பெண் லண்டன் வெம்ப்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயதான கொந்தம் தேஜஸ்வினி என்ற பெண் லண்டன் வெம்ப்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த கொந்தம் தேஜஸ்வினி, செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் குடியிருப்பு வளாகத்தில், பிரேசிலியாவை சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாஜகவின் கொங்கு மண்டல கனவை தகர்த்தவர் செந்தில் பாலாஜி.. பாஜகவின் சுயநலம் - மா.சுப்பிரமணியன்
ஹைதராபாத்தில் உள்ள தேஜஸ்வினியின் உறவினர், தேஜஸ்வினி தனது நண்பர்களுடன் வசித்து வந்த பகிரப்பட்ட தங்குமிடத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு குடிபெயர்ந்ததாகவும் கூறினார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேஜஸ்வினி முதுகலைப் பட்டம் பெற லண்டன் சென்றதாக கூறப்படுகிறது.கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த நபர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்தப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சந்தேக நபரான 23 வயது இளைஞரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மெட்ரோபொலிட்டன் காவல்துறை இதற்கு முன்னர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கெவன் அன்டோனியோ லோரென்கோ டி மொரைஸின் படத்தை வெளியிட்டது என்று கூறப்படுகிறது. மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.