கழிவறையில் கேமரா.. மேலாளரின் மனைவி மற்றும் மகளை படமெடுத்த மெக்கானிக் - சிக்கியது எப்படி?

By Ansgar R  |  First Published Jul 13, 2023, 8:09 PM IST

சிறை தண்டனை பெற்றுள்ள அந்த நபரின் பெயர் குணசேகரன் பவுல், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த கீழ்த்தரமான வேலையை செய்து வந்துள்ளார்.


சிங்கப்பூரில் 34 வயதான மலேசிய நபர் ஒருவருக்கு கடந்த ஜூலை 12ம் தேதி அன்று நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் பணிசெய்து வந்த பணியிடத்தில் உள்ள கழிவறையில் கேமரா பொருத்தி, அதன் மூலம் தனது முதலாளியின் மனைவி மற்றும் மகளை ரகசியமாக படம்பிடித்துள்ளார்.

சிறை தண்டனை பெற்றுள்ள அந்த நபரின் பெயர் குணசேகரன் பவுல், கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை அவர் பணிபுரிந்த இடத்தில் இரண்டு மொபைல் போன்கள் மற்றும் இரண்டு ஒலிப்பதிவு சாதனங்களைப் பயன்படுத்தி அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

மெக்கானிக் வேலை பார்த்துவந்த குணசேகரன் இருந்த ஒர்க் ஷாப்பில், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு என்று ஒரே ஒரு கழிவறை தான் இருந்துள்ளது. குணசேகரன் தனது ஒர்க்ஷாப்பில் உள்ள கழிவறை தரையில் ஒரு ரெக்கார்டிங் சாதனத்தை பொருத்தி அதை மறைக்க ஆண்டி-ஸ்லிப் ஃப்ளோர் கவரிங் பயன்படுத்தியுள்ளார். 

காதலனுடன் காரில் நெருக்கம்! ரகசிய வீடியோ! பெண்ணை பாலோ செய்த நபர்! இறுதியில் படிக்கட்டில் வைத்து.!

ஏப்ரல் மாதம் முதல் சுமார் 71 வீடியோக்கள் அதில் பதிவான நிலையில் ஒரு நாள் அந்த கருவி அந்நிறுவன முதலாளியின் மகளின் கண்ணில்பட்டுள்ளது. அதிர்ந்துபோன அவர் அதை தனது தாயிடம் கொடுத்துள்ளார். தாய் அதைக்குறித்து அங்கு பணி செய்பவர்களின் விசாரித்தும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் தான் ஜூன் மாத வாக்கில் கழிவறையில் உட்புறம் ஒரு Pant மற்றும் அதில் ஒரு கருப்பு நிற செல்போன் இருப்பதை கண்டுள்ளார் அந்த தாய். அதுவும் அந்த போனில் வீடியோ ரெகார்டிங் ஆகிக்கொண்டிருப்பதை அவர் கண்டுபிடித்துள்ளார். அந்த போன் குணசேகரனுடையது என்று இறுதியில் தெரியவர இந்த வழக்கு போலீசாரிடம் சென்றுள்ளது. 

அந்த ஆசாமிக்கு கடந்த ஆண்டே வேலைபோன நிலையில் தற்போது 4 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது. இந்த ஆள் செஞ்ச வேலைக்கு 4 மாதம் ரொம்ப கம்மி என்று பீல் செய்து வருகின்றனர் இனைய வாசிகள்.

வெளிநாட்டுப் பயணத்தில் பிரதமர் மோடியுடன் அவ்வப்போது தோன்றும் இந்தப் பெண்மணி யார்?

click me!