ஸ்டீராய்டு ; அதிம் உள்ள 4 பொருட்களுக்கு சிங்கப்பூர் சுகாதாரத்துறை தடை!

By Dinesh TG  |  First Published Jul 13, 2023, 12:19 PM IST

Enru Plus+, HKT Herba Kurus Tradisi, Pill Hua Luo Cin Tan and Spinach Ginseng Herb Sugar இந்த மருந்துப் பொருட்களில் ‘ஸ்டீராய்டு’ ஊக்க மருந்து அதிக வீரியமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 


Enru Plus+, HKT Herba Kurus Tradisi, Pill Hua Luo Cin Tan and Spinach Ginseng Herb Sugar இந்த மருந்துப் பொருட்களில் ‘ஸ்டீராய்டு’ ஊக்க மருந்து அதிக வீரியமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்காணும் மருந்துகளை உட்கொண்ட சிலருக்கு எதிர்மறையான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘என்ரூ பிளஸ்+’ (Enru Plus+), ‘எச்கேடி ஹர்பா குரூஸ் டிராடிசி’(HKT Herba Kurus Tradisi), ‘பில் ஹுவா லுஒ சின் டான்’(Pill Hua Luo Cin Tan), ‘ஸ்பினாச் ஜின்செங் ஹர்ப் ஷுகர்(Spinach Ginseng Herb Sugar)’ ஆகியவை ஆகும்.

இந்த மருந்துகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் ஏஜென்கள் கொண்ட விற்பனையாளர்களால் பல்வேறு உள்ளூர் இ-வணிகத் தளங்களான ‘ஷாப்பீ’, ‘லஸாடா’, ‘கெரசல்’, ‘கூ10’ ஆகியவற்றின் மூலம் விற்கப்படுகின்றன என்றும் கண்டறிய்பட்டுள்ளது.

‘என்ரூ பிளஸ்+’ புராடக்ட் ஃபேஸ்புக்கிலும் மற்ற சமூகவலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு ஃபேமஸ் டிரிங்க் மூலம் தினமும் 24 லட்சம் வருவாய் ஈட்டும் பிரபல ஹோட்டல்..

இந்நிலையில், மேற்கூறிய அந்த 4 பொருட்களை விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்க சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம், இ-வணிகத் தளங்களின் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பொருள்கள் மலேசியாவிலும் விற்கப்படுவதால், அவற்றின் பக்கவிளைவுகள் குறித்த மலேசிய ஆணையத்துக்கு சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. விற்பனையாளர்களுக்கு இந்த மருந்துகளை விற்கக்கூடாது என்று எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

Latest Videos

சிங்கப்பூரில் தொடர்ச்சியாக பல குற்றங்கள்.. இந்திய வம்சாவளி வாலிபருக்கு 22 மாத சிறை - கூடுதலாக 12 பிரம்படி!

click me!