இன்று காலை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் பிரெஞ்சு தேசிய தின நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி தனது பயணத்துக்கு முன்னதாக பிரான்ஸ் நாட்டின் முன்னணி நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பை பாராட்டி இருக்கிறார்.
பிரதமர் மோடி இன்று (விழாயழக்கிழமை) காலை சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். பயணத்துக்கு முன்பாக பிரெஞ்சு நாளிதழான Les Echos க்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிரதமர் மோடி இந்தியா-பிரான்ஸ் இடையேயான 25 ஆண்டுகால நட்புறவு பற்றிப் பேசியுள்ளார். "நாம் இப்போது ஒரு திருப்புமுனையில் இருப்பதாக உணர்கிறேன். கொரோனா தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகளாவிய சூழலில், நமது கூட்டுறவு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த 25 ஆண்டுகால பாதையில் பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்." என்றார்.
ஹரியானா எம்எல்ஏ கன்னத்தில் பளார்! வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண் சீற்றம்!
"பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம் மற்றும் குடிமக்கள் என இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகள் ஆழமாகி வருகின்றன. 2014ல் இருந்து நமது வர்த்தகம் ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும், இரண்டு இந்திய விமான நிறுவனங்கள் பிரான்சைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடம் 750க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன. டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இரு நாடுகளும் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன. சூரிய ஆற்றல், காற்று மற்றும் சுத்தமான ஹைட்ரஜன் உள்ளிட்ட மாசுபாடற்ற ஆற்றல் துறைகளில் வலுவான ஒத்துழைப்பு காணப்படுகிறது" என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தியா கீழை நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “இந்தியா பிற நாடுகளுக்கு வலிமையான தோள் கொடுக்கும் நாடாக இருப்பதை நான் காண்கிறேன். இந்திய கீழை நாடுகளுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் தொடர்பை உருவாக்க முடியும். ஒரு வகையில், தோளுக்குத் தோள் கொடுக்கும் பாலமாக செயல்படும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் உடனான இந்தியாவின் உறவு சிறந்த நிலையில் உள்ளது என்றும் வலுவாகவும் நம்பகமானதாகவும் நிலையானதாகவும் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இலக்கு மற்றும் எதிர்காலத் திட்டம் பற்றி பேசியுள்ள பிரதமர் மோடி, "2047ஆம் ஆண்டு வரும் இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு ஆண்டு விழாவை முன்னிட்டு தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறோம். 2047ல் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதை நாங்கள் காண விரும்புகிறோம். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் வாய்ப்புகள் என அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வளர்ந்த பொருளாதாரத்தை அடைய விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.
சந்திராயன் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய தமிழர்... இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல்!
மேலும், "இந்தியா ஒரு துடிப்பான கூட்டாட்சி ஜனநாயக நாடு. அனைத்து குடிமக்களும் தங்கள் உரிமைகளைப் பற்றிய பாதுகாப்பு உணர்வுடனும், நாட்டில் தங்களுக்கு உள்ள இடம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடனும் இருப்பார்கள். தொழில்நுட்பத்தில் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கும். நிலையான வாழ்க்கை முறைகள், தூய்மையான ஆறுகள், நீல வானம் மற்றும் பல்லுயிர் நிரம்பிய காடுகள் மற்றும் வனவிலங்குகள் கொண்ட நாடாக இருக்கும். இந்திய பொருளாதாரம் வாய்ப்புகளின் மையமாகவும், உலகளாவிய வளர்ச்சிக்கான இயந்திரமாகவும், திறன்கள் மற்றும் ஆற்றலின் ஆதாரமாகவும் இருக்கும். ஜனநாயகத்தின் வலிமைக்கு இந்தியா வலுவான சாட்சியாக இருக்கும்." என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடி பயணிக்கும் சிறப்பு விமானம் இன்று மாலை 4 மணி அளவில் பாரிஸ் சென்றடையும். ஓர்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும். இரவு 7:30 மணியளவில் பிரதமர் செனட் சபையை அடையும் மோடி, செனட் தலைவர் ஜெராட் லார்ச்சரை சந்திக்க உள்ளார்.
இரவு 8.45 மணியளவில் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னை மோடி சந்தித்துப் பேசுகிறார். லா செயின் மியூசிக்கல் ஹாலில் இரவு 11 மணியளவில் நடைபெற உள்ள இந்திய சமூக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன்பின், மதியம் 12:30 மணிக்கு எலிசே அரண்மனையை சென்றடைவார். இங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிப்பட்ட விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். வெள்ளிக்கிழமை பாரிஸில் நடைபெறும் பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.