சிங்கப்பூரரான முஹமது தௌஃபிக் ஹிதாயத், கான்பெராவில் உள்ள தனது முந்தைய வீட்டில் இருந்து கடந்த டிசம்பர் 2021ல் வெளியேறியுள்ளார்.
சிங்கப்பூர் அரசை பொறுத்தவரை, தாங்கள் விதிக்கும் சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் திறன்கொண்டது. அந்த வகையில் தனது விலாசத்தை மாற்றிய ஒருவர், அதை சிங்கப்பூர் அரசிடம் சரிவர தெரிவிக்காத நிலையில் அவருக்கு அபராதம் விதித்துள்ளது சிங்கப்பூர் அரசு.
சிங்கப்பூரில் வீட்டை மாற்றிய 28 நாட்களுக்குள் தனது புதிய வீட்டு முகவரியை மாற்றியமைக்கத் தவறியதற்காக 35 வயது சிங்கப்பூரருக்கு கடந்த ஜூலை 4ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று 3,700 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் 3700 சிங்கப்பூர் டாலர் என்பது 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் பார்ட்னர் ஆக விரும்பும் சிங்கப்பூர்! 'பிளான் 5 எக்ஸ்'!
சிங்கப்பூரின் தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒருவர் தனது விலாசத்தை மாற்றிய 28 நாட்களுக்குள் அதை உரிய அதிகாரிகளிடம் அறிவிக்கவேண்டும். சிங்கப்பூரரான முஹம்மது தௌஃபிக் ஹிதாயத், கான்பெராவில் உள்ள தனது முந்தைய வீட்டில் இருந்து கடந்த டிசம்பர் 2021ல் வெளியேறியுள்ளார்.
ஆனால் 2022 ஏப்ரல் மாதம் வரை முஹம்மது, தங்களிடம் வீட்டை மாற்றியது குறித்து தெரிவிக்கவில்லை என்ற புகாரை, நகர்புற மறுவடிவமைப்பு ஆணையம் (URA), குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்திடம் (ICA) அளித்துள்ளது.
இதனையடுத்து குறிப்பிட்ட அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிங்கப்பூர் சட்டதிட்டங்களின்படி அவருக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் - இந்தோனேசியா QR-Code பணப் பரிவர்த்தனை! விரைவில் அமல்!