மாலத்தீவு அரசு வழக்கறிஞர் மீது பட்டப்பகலில் கொடூர தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீமை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி உள்ளனர். மாலத்தீவு அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞரை கத்தியால் குத்தி உள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. மாலத்தீவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
மாலத்தீவில் தற்போது முகமது முய்ஸு தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலத்தீவு சுற்றுலா தரவரிசை: 5ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா!
ஷமீம் மீதான தாக்குதல், சட்ட மற்றும் அரசாங்கத் துறைகளில் முக்கியப் பிரமுகர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக்காட்டுகிறது. மாலத்தீவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளது. வழக்கறிஞர் மீதான கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை, ஆனால் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும் மாலத்தீவு தீவிரவாதம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை மோசடமடைந்து வருவதாக கவலை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.