நர்சுகள், ஹிஜாப் அணிந்த பெண்கள், நோயாளிகள் போல வேடமிட்டு மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள் ஆடைகளுக்குள் ஆயுதங்களையும் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையின் மூன்றாம் தளத்திற்குச் சென்ற அவர்கள், அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீனியர்கள் 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பாலஸ்தீன மருத்துவமனை ஒன்றில் மாறுவேடங்களில் நுழைந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் 3 பேரைச் சுட்டுக் கொன்றனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஆரம்பித்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உலகையே உலக்கியுள்ளது. தொடர்ந்து போரினால் நிகழ்ந்த கொடுமைகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ஹமாஸ் குழுவினரை ஒழிக்க இஸ்ரேல், பாலஸ்தீன காசா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலிய ராணுவ படையினர் பாலிஸ்தீனியர்களைத் தேடி காசாவில் மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் உள்ள இப்ன் சினா மருத்துவமனைக்குள் மாறுவேடங்களில் நுழைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் நக்சல் என்கவுண்டரில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம்; 14 வீரர்களுக்கு காயம்
Israeli terror : The Israeli special troop invaded this early morning Ibn Sina (Avisina) hospital in Jenin disguised as Nurses, women, old men and one of as a patient in a wheelchair and executed 3 Palestinians who were getting treatment in the hospital violating humanitarian law pic.twitter.com/sK8HxMGKS3
— Mustafa Barghouti @Mustafa_Barghouti (@MustafaBarghou1)நர்சுகள், ஹிஜாப் அணிந்த பெண்கள், நோயாளிகள் போல வேடமிட்டு மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள் ஆடைகளுக்குள் ஆயுதங்களையும் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையின் மூன்றாம் தளத்திற்குச் சென்ற அவர்கள், அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீனியர்கள் 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கொல்லப்பட்ட மூன்று பேரும் பாலஸ்தீன ராணுவத்தின் ஜெனின் ப்ரிகேட்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் என ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், கொல்லப்பட்ட மூவரும் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கிறது.
மொஹம்மெட் ஜலாம்னெஹ் என்ற முக்கிய பயங்கரவாதியைக் குறிவைத்தது இந்தத் தாக்குதல் நடத்தியதாகவும் ஆனால், அந்த அமைப்புடன் தொடர்பு இல்லாத சகோதரர்கள் இருவரும் இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டனர் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த வேட்டையை பாராட்டியும் இருக்கிறார்.
இந்த வேட்டையைத் தொடர்ந்து ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பாலஸ்தீன சுகாதார துறை ஐ.நா.வின் பொதுச்சபையிடம் கோரிக்கை வைத்துள்ளது.
6 லட்சத்தைத் தாண்டிய டாடா நெக்சான் உற்பத்தி! கார் பிரியர்கள் எல்லாருக்கும் பிடிச்ச எஸ்யூவி இதுதான்!