அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கு : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..

By Ramya s  |  First Published Jan 30, 2024, 1:44 PM IST

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி நிறுவனருமான இம்ரான் கான் மற்றும் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு மறைக்குறியீட்டு தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தானில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

எனினும் தனது அரசாங்கத்தை கவிழ்த்து, தன்னைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நீக்குவதற்கான சதியை அந்த மறைக்குறியீடு சுட்டிக் காட்டியதாக இம்ரான் கான் பலமுறை கூறியிருந்தார். இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் குரேஷிக்கு எதிராக 10 சாட்சிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர். பாகிஸ்தானின் விசாரணை ஆணையம் (எஃப்ஐஏ) மூலம் அவர்களின் சாட்சியத்தை பதிவு செய்தது.

Tap to resize

Latest Videos

மாலத்தீவு சுற்றுலா தரவரிசை: 5ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா!

இதை தொடர்ந்து இம்ரான் கான் மற்றும் குரேஷி ஆகியோர் ரகசிய ராஜதந்திர தகவல்தொடர்பு விவரங்களை வெளிப்படுத்தியததால், நாட்டின் ரகசிய சட்டங்களை மீறியதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் குரேஷி இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து டிசம்பரில், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இம்ரான் கான் மற்றும் குரேஷிக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் கடந்த ஆண்டு மே 9 அன்று ஒரு புதிய வழக்கில் குரேஷி கைது செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதால், குரேஷியின் விடுதலை தாமதமானது.

இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியை இம்ரான் இழந்தார். இதையடுத்து அவர் மீது 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வகையில், தோஷகானா வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து, ஆகஸ்ட் 5, 2023 அன்று அவர் அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

மனித மூளைக்குள் சிப்பை பொருத்திய எலான் மஸ்க்கின் நியூராலிங்க்.. சோதனை நபர் எப்படி இருக்கிறார்.?

பின்னர், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவரின் தண்டனையை நிறுத்தி வைத்தது. ஆனால் பின்னர் அவர் மறைக்குறியீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அட்டாக் சிறையில் இருந்தார். இந்த சூழலில் தான் அவருக்கு இந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

click me!