உலகில் இந்த ஒரு கிராமத்தில் மட்டும் மழையே பெய்யாதாம்.. ஏன் தெரியுமா?

Published : Jan 31, 2024, 09:38 AM IST
உலகில் இந்த ஒரு கிராமத்தில் மட்டும் மழையே பெய்யாதாம்.. ஏன் தெரியுமா?

சுருக்கம்

உலகிலேயே இந்த கிராமத்தில் மழையே பெய்யாது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

நமது பூமி பல வித்தியாசமான கோட்பாடுகளாலும், பல அதிசயங்களாலும் நிரம்பி உள்ளது. நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பல அதிசியங்கள் இந்த உலகில் உள்ளன. அந்த வகையில் ஒரு அதிசய கிராமத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். உலகிலேயே இந்த கிராமத்தில் மழையே பெய்யாது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மை தான். இந்த கிராமத்தில் ஒருபோதும் மழையே பெய்யாதாம். 

நம் நாட்டில் உள்ள மேகாலயா மாநிலத்தின் மவ்சின்ராம் கிராமம் உலகிலேயே அதிக மழைப்பொழிவை பெறுகிறது. இதற்கு நேர்மாறாக ஒரு போதும் மழையே பெய்யாத ஒரு இடம் இருக்கிறது. அது ஒரு பாலைவனமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு.

அடேங்கப்பா... சொர்க்கத்தையே கப்பலில் இறக்கிட்டாங்க! முதல் பயணத்தைத் தொடங்கிய பிரம்மாண்ட கப்பல்!

இந்த கிராமம் ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ளது. சனாவின் மேற்கில் உள்ள மனாக் ஹராஜ் பகுதியில் அல்-ஹுதைப் என்ற கிராமம் உள்ளது. இங்கு இதுவரை ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் இந்த கிராமத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியிலும் மிக அழகான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனை காணவே இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.  அல்-ஹுதைப் கிராமம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் மேகங்களுக்கு மேல் அமைந்துள்ளதே, இங்கு மழை பெய்யாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மழை இல்லாததால் இந்த பகுதி வறட்சியாகவே காணப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் பண்டைய கால ஏரி.. ஆச்சர்யத்தில் நாசா விஞ்ஞானிகள்.. எப்படி இருக்குன்னு பாருங்க..?

பழங்கால மற்றும் நவீன கட்டிடக்கலையை இந்த கிராமத்தில் பார்க்க முடிவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். இந்த இடம் அல்-போஹ்ரா அல்லது அல்-முக்ரமா கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏமன் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடியேறுவதற்கெஉ இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் முஹம்மது புர்ஹானுதீன் தலைமையிலான இஸ்மாயிலி (முஸ்லிம்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கிராமத்தில் இரண்டு பள்ளிகள், மற்றும் ஹதிமி மசூதி மற்றும் மன்சூர் அல் ஏமன் மசூதி என்ற இரண்டு மசூதிகள் உள்ளன.

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு