300 கார்கள்..தனியார் ராணுவம்..விமானங்கள்.. மலேசியா புதிய மன்னரின் அசர வைக்கும் சொத்து ரகசியம் இதோ...

By Kalai Selvi  |  First Published Feb 1, 2024, 12:18 PM IST

மலேசியா மன்னர் சுல்தானின் பொருளாதார சாம்ராஜ்யம் அவரது நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பறந்து விரிந்திருக்கும் ஒரு பேரரசு.


சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் தனது 65 வயதில் மலேசியாவின் அரியணையில் அமர்ந்திருக்கிறார். அவரது மொத்த சொத்து சுமார் ரூ. 500 பில்லியன் ($5.7 பில்லியன்) மற்றும் அவரது பொருளாதார சாம்ராஜ்யம் அவரது நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பறந்து விரிந்திருக்கும் ஒரு பேரரசு.

சுல்தான் இப்ராஹிமின் வணிகத்தின் நோக்கம் ரியல் எஸ்டேட், சுரங்கம் முதல் தொலைத்தொடர்பு மற்றும் பாமாயில் வணிகம் வரை நீண்டுள்ளது. அடோல்ஃப் ஹிட்லர் பரிசளித்ததாகக் கூறப்படும் கார் உட்பட, மலேசிய அரச குடும்பத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை அவர் வைத்திருக்கிறார்.

Tap to resize

Latest Videos

மலேசியாவின் புதிய ராஜாவான, சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தாரிடம் போயிங் 737 உட்பட தனியார் ஜெட் விமானங்களும் உள்ளன. இவரது குடும்பத்திற்கென தனிப்படை இராணுவம் இருப்பதாக கூறப்படுகிறது. 'ப்ளூம்பெர்க்' இன் அறிக்கை படி,  சுல்தானின் அவரது குடும்பச் சொத்து சுமார் 5.7 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சுல்தான் இப்ராஹிமின் உண்மையான செல்வத்தின் அளவு இதை விட அதிகம் என்று நம்பப்படுகிறது. மலேசியாவின் முன்னணி செல்போன் சேவை வழங்குனர்களில் ஒன்றான யு மொபைலில் 24% பங்குகள் அவரது சொத்துக்களில் அடங்கும். இதில் தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் $588 மில்லியன் கூடுதல் முதலீடு அடங்கும்.

இதையும் படிங்க:  சொத்து மதிப்பு உயர்வில், அம்பானி, அதானியை பின்னுக்குத் தள்ளிய சாவித்ரி ஜிண்டால்..

சிங்கப்பூரில் மதிப்புமிக்க நிலத்தின் உரிமையாளர்:
மலேசியாவின் புதிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தருக்கு சிங்கப்பூரில் $4 பில்லியன் மதிப்புள்ள நிலம் உள்ளது. இதில் தாவரவியல் பூங்காவை ஒட்டிய பெரிய பகுதியான டைர்சால் பூங்காவும் அடங்கும். பங்கு மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மூலம் பெரும் தொகையை ஈட்டிய சுல்தானின் முதலீட்டு $1.1 பில்லியன் உள்ளது. 

இப்போது சுல்தான் இப்ராஹிம் அரியணையில் இருப்பதால், அவரது பங்கு பெரும்பாலும் சம்பிரதாயமானதாக இருக்கும். ஆனால், மலேசியாவின் முந்தைய சுல்தான்களைப் போலல்லாமல், புதிய சுல்தான் இப்ராஹிம் ஆடம்பரமானவராகவும் மிகவும் வெளிப்படையாகவும் கருதப்படுகிறார். சுல்தான் ஏற்கனவே கூட்டு முயற்சிகள் மூலம் மலேசியர்களுக்கு பல வேலைகளை உருவாக்க முடிந்தது. சிங்கப்பூர் அரசாங்கத் தலைமையுடன் சுல்தானின் நெருங்கிய உறவும், முன்னணி சீன டெவலப்பர்களுடனான வர்த்தக உறவும் மலேசியாவின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உறவுகள் மலேசியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை பாதிக்கலாம்.

இதையும் படிங்க:  “விடுகதையா இந்த வாழ்க்கை” ரூ.40,000 கோடி சொத்துக்களை உதறி தள்ளிவிட்டு துறவியாக மாறிய தமிழர்.. யார் அவர்?

சுல்தான் இப்ராஹிமின் செல்வாக்கு அவரது செல்வத்திற்கு அப்பால் மலேசியாவின் பொருளாதார நிலப்பரப்பு வரை பரவியது. இவர் சீன அதிபர்களுடன் கூட்டு முயற்சிகள் மூலம் முக்கிய திட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது வணிக நலன்கள் மற்றும் சீன முதலீட்டாளர்களோடு கூட்டணிகள் சிங்கப்பூர் தலைவர்களுடான ஒரு சிறப்பு உறவு ஆகியவை அவரை பிராந்திய பொருளாதார விவகாரங்களில் ஒரு பெரிய பங்காளியாக ஆக்குகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!