நாளை முதல் வாரத்தில் 4 நாள் தான் வேலை.. சொன்னபடி ஊதியம்.. எங்கு தெரியுமா..?

By Kalai Selvi  |  First Published Jan 31, 2024, 8:17 PM IST

ஜெர்மனியில், நாளை முதல் வாரத்தில் நான்கு நாள் வேலை 6 மாத சோதனையை  தொடங்குகிறது. மேலும் விவரங்கள் உள்ளே..


இன்றைய காலகட்டத்தில் மக்கள் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஏன் இன்னும் சொல்லப்போனால், பிறரிடம் முகம் கொடுத்து அன்பாக பேச முடியாத அளவிற்கு அவர்கள் அவ்வளவு பிஸியாக இருக்கிறார்கள். காரணம், அப்போதுதான் சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும், நினைத்ததை சாதிக்க முடியும். இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இப்படி அவர்கள் ஓடிக்கொண்டிருப்பதால் தங்கள் குடும்பம், நட்பு, உறவு ஆகியவற்றிலிருந்து தூரமாகவே இருக்கிறார்கள். 

இந்நிலையில், இந்தியாவில் வெற்றிபெற வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று அனைத்து தொழிலதிபர்களும் கூறுகிறார்கள். இளைஞர்கள் இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஜெர்மனியில் வாரம் 4 நாள் வேலை என்ற சோதனை ஆரம்பமாகிறது.

Latest Videos

undefined

கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா ஆனால் அதுதான் உண்மை. பிப்ரவரி 1, 2024, அதாவது நாளை முதல் வாரத்தில் நான்கு நாள் வேலைக்கான 6 மாத சோதனையை ஜெர்மனி தொடங்குகிறது. இதில் 45 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது பணியாளர் நல்வாழ்வு, உற்பத்தித்திறன் மற்றும் நிதி சவால்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏனெனில் நிறுவனங்கள் குறைவாக வேலை செய்வது ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்குமா?  என்று சோதிக்கிறது.

இதையும் படிங்க: வருவாய் ஈட்டுவதில் சிக்கல்.. 12,000 பணியாளர்களை நீக்கும் முடிவில் பிரபல நிறுவனம் - என்ன நடந்தது? முழு விவரம்!

இந்த ஆறுமாத வேலைத்திட்டம், நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் கூடுதல் விடுமுறை அளித்து, அவர்களுக்கு முழு ஊதியம் வழங்கும். ஊழியர்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருந்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்பது இதன் நோக்கம்.

இதையும் படிங்க:  கூகுளில் இந்த ஆண்டு பணி நீக்கம் உறுதி.. ஊழியர்கள் ஷாக் - மெமோ மூலம் எச்சரித்த சுந்தர் பிச்சை..!

'புதிய வேலைக்கான முதலீடுகள் பலனளிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஏனெனில் அவை நல்வாழ்வையும் உந்துதலையும் அதிகரிக்கின்றன. பின்னர் செயல்திறனை அதிகரிக்கின்றன' என்று பைலட் திட்டத்தில் பங்கேற்கும் 45 நிறுவனங்களில் ஒன்றான SolidSense -ன் நிகழ்வு திட்டமிடல் இணை நிறுவனர் சோரன் ஃப்ரிக் கூறினார்.

ஜெர்மன் தொழிலாளர் சந்தையில் நடைபெறும் பரந்த மாற்றத்தை இந்த திட்டம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. திறமையான பணியாளர்களின் பற்றாக்குறை நிறுவனங்கள் தங்கள் பதவிகளை நிரப்ப அழுத்தம் கொடுக்கிறது. இருப்பினும், சில பொருளாதார வல்லுநர்கள் இந்த நடவடிக்கை பணவீக்கத்தைத் தூண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த முன்னோடித் திட்டம் தொடர, ஊழியர்கள் குறைந்த நாட்களில் அதிக உற்பத்தி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். மேலும், ஊழியர்களுக்கு விடுப்பு எடுப்பதும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமை அல்லது பொது விடுமுறை நாட்களில் வேலை செய்யும்படி முதலாளிகள் உங்களை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், தொழிலாளி வேலை செய்ய வேண்டியிருந்தால், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஒரு மாற்று நாளை வழங்குவதற்கு முதலாளி சட்டப்பூர்வமாக கடமைப்பட்டிருக்கிறார்.

click me!