இந்தியாவைக் குற்றம் சாட்டும் பாகிஸ்தான்... ஓடி வந்து முட்டுக்கொடுக்கும் சீனா... இந்தியாவின் பதிலடி எப்படி?

By SG BalanFirst Published Jan 31, 2024, 4:44 PM IST
Highlights

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறும் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவிக்கிறது.

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அரசு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுகள் கவனத்திற்குரியவை என்று சீனா கூறியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மீதான ஐ.நா.வின் தடையை நிறைவேற விடாமல் சீனா தடுத்து வருகிறது என்று இந்தியா குற்றம்சாட்கிறது. இந்நிலையில், இந்தியா குறித்து பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், பயங்கரவாதத்திற்கு எதிரான இரட்டை நிலைப்பாட்டை எதிர்ப்பதாகக் கூறியுள்ளது.

"பயங்கரவாதம் மனிதகுலத்தின் பொது எதிரி என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்" என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.

மேலும், "பயங்கரவாதத்திற்கு எதிரான இரட்டைத் தரத்தை சீனா எதிர்க்கிறது. இது யாருக்கும் பயனளிக்காது. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கூட்டாக எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து நாடுகளிடையேயும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது" என்று கூறினார்.

மாறுவேடத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து 3 பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

கடந்த ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்டுகளுக்கு தொடர்பு இருப்பதற்கான "நம்பகமான ஆதாரங்கள்" தங்களிடம் இருப்பதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

ஷாகித் லத்தீப் மற்றும் முஹம்மது ரியாஸ் ஆகியோர் இந்திய அரசால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய உதவியாளரும், 2016-ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான லத்தீப், அக்டோபர் 11, 2023 அன்று சியால்கோட்டில் உள்ள மசூதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ். இவர் ஜனவரி 1, 2023 அன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த தாங்ரி பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரர்களில் ஒருவர். இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அல்-குதுஸ் மசூதிக்கு வெளியே செப்டம்பர் 8, 2023 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவிற்கு எதிரான தவறான மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தை பாகிஸ்தான் மேற்கொள்வதாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. பயங்கரவாதம் மற்றும் நாடுகடந்த சட்டவிரோத நடவடிக்கைகளின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இதே போன்ற குற்றச்சாட்டுகளை கனடாவும் அமெரிக்காவும் முன்வைத்துள்ளன, அவற்றையும் இந்தியா மறுத்துள்ளது.

ஒரு மாசம் மொபைல் யூஸ் பண்ணாம இருந்தா ரூ.8 லட்சம் பரிசு! நீங்க ரெடியா? சவால் விடும் சிக்கி!

click me!