
இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்ததற்கு அந்நிய நாட்டு சக்திகளே காரணம் என்றும், கடந்தகால அரசு எடுத்த தவறான முடிவுகளுமே காரணம் என்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே காலத்தில் எடுக்கப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பொருளாதாரம் சீர்குலைந்தது. இலங்கைக்கு பெரும்பகுதி அந்நியச் செலாவணி சுற்றுலா மூலமே கிடைத்து வந்தது. ஆனால், கொரோனா பரவல் ஏற்பட்ட பாதிப்பால் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைத்த வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்திலிருந்து கொழும்பு திரும்பினார்
இதனால் இலங்கை அரசிடம் படிப்படியாக அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்து, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூட அந்நியச் செலாவணி இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் உள்நாட்டில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்கள், பால் பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்தன. மக்களின் வாழ்வாதாரம் படுமோசமாக வீழ்ந்தது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கொந்தளித்து அரசுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் முதல் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் போராட்டம் உச்சத்தை அடையவே அதிபராக இருந்த கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பினார், பிரதமராக இருந்த மகிந்தா ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
சிறிது கால இடைவெளிக்குப்பின் கோத்தபய ராஜபக்சநாடு திரும்பியுள்ளார். இருப்பினும் இலங்கையின் பொருளாதாரம் இன்னும் சீரடையவில்லை. தற்காலிகமாக நிலைமையை சரிசெய்ய, உலக வங்கி, சர்வதேச செலவாணி நிதியத்திடம் கடன் பெற்றுள்ளது.
இலங்கை அரசுக்கு எந்தவிதமான புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி கைவிரிப்பு
இந்நிலையில் அதிபராகவும், நிதிஅமைச்சராகவும் இருக்கும் ரணில் விக்ரமசிங்கே பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, முன்னாள் அதிபர் மகிந்தா ராஜப்கேச பேசியதாவது :
இலங்கையின் செழுமையான வளங்களை அந்நிய நாட்டு சக்திகள் நோட்டமிட்டன. உள்நாட்டில் அந்த அந்நியச் சக்திகளுக்கு துணையாக இருக்கும் உள்நாட்டு ஏஜென்ட்கள் மூலம் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன. இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்ததற்கு அந்நிய நாட்டு சக்திகளே காரணம் கடந்தகால அரசு எடுத்த தவறான முடிவுகளுமே காரணம்.
போராட்டத்தை தூண்டிவிட்டவர்களால், நாட்டின் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இப்போதுதான் சுற்றுலாத்துறை மெல்ல மீண்டு வருகிறது
விக்ரமசிங்கை தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட் இக்கட்டான நேரத்தில் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தக்கூடியதாகும். பொருளாதாரம் இக்கட்டாகஇருந்தாலும்கூட பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கும் நிதிஅளவு அதிகரி்க்கப்பட வேண்டும்.
இலங்கை அதிபர் ரணில்-க்கு எதிராகவும் போராட்டம் வரலாம்; கொந்தளிப்பு தொடரும்: ப.சிதம்பரம் ஆரூடம்
பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதை சிலர் கேள்வி கேட்கலாம். ஆனால், மற்ற எல்லாவற்றையும்விட நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். தேசத்தின் பாதுகாப்பை நாம் தணித்து தவிக்கவிட முடியாது” எனத் தெரிவித்தார்
ஆனால், தமிழ் எம்.பி.க்கள் பாதுகாப்புத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ரணில் விக்ரமசிங்கே நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பெரும்பான்மையுடன் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச செலாவணி நிதியம், உலக வங்கியின் கட்பாடுகளுக்கு உட்பட்ட பல்வேறு புதிய கொள்கைகளை இலங்கை அரசு கொண்டு வரஉள்ளது. ஆனால் இலங்கை அரசின் இந்த செயல்பாடுகளுக்கு பொருளாதார வல்லுநர்கள், அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.