அமெரிக்கா செல்ல வேண்டுமா? விசா பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!!

By Dhanalakshmi G  |  First Published Nov 23, 2022, 2:52 PM IST

அமெரிக்காவுக்கு செல்வதற்கு இந்தியர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போது தான் விசா கிடைக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


பி1 (வணிகம்) மற்றும் பி2 (சுற்றுலா) விசாவில் அமெரிக்காவிற்குச் செல்லத் திட்டமிடுபவர்கள் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். விசா பெறுவதற்கு காத்திருக்கும் இந்திய விண்ணப்பதாரர்களின் கால நேரம் 1,000 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பி1/பி2 விசா நேர்காணலுக்காக காத்திருக்கும் கால நேரம் 961 நாட்கள் (நவம்பர் 23 வரை) என அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தும் அதே வேளையில், அமெரிக்காவிற்கு சட்டப்பூர்வமான பயணத்தை எளிதாக்குவதில் உறுதியாக இருப்பதாக வெளியுறவுத்துறை இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.

Latest Videos

undefined

தற்போதைய காத்திருப்பு அறிவிப்பின்படி, மும்பையில் வசிப்பவர்கள் 999 நாட்கள், ஐதராபாத்தில் வசிப்பவர்கள் 994 நாட்கள், சென்னையில் வசிப்பவர்கள் 948 நாட்கள், கேரளாவில் வசிப்பவர்கள் 904 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid Cases in China: கவலையில் சீனா! விடாமல் துரத்தும் கொரோனா !3 வாரத்தில் 2.53 லட்சம் பாதிப்பு

மேலும், "அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் நேர்காணலுக்கான நேரத்தை பெறுவதற்கான காத்திருப்பு நேரம் வாரந்தோறும் மாறலாம். ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொருத்து இவை மாறுபடலாம்" என்று வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் விசா விண்ணப்பங்கள் தேங்கி இருப்பது குறித்து தனது கவலையை தெரிவித்தார். உலகம் முழுவதும் இதேபோன்ற சூழல் நிலவுவதாகவும், கொரோனாவுக்குப் பின்னர் சவால்கள் நிறைந்து இருப்பதாகவும், இந்தியாவுக்கு விசா வழங்குவது குறித்து முடிவு எடுப்பதாகவும் உறுதி அளித்து இருந்தார். 

அமெரிக்காவில் வால்மார்ட் மேலாளர் ஊழியர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு!!

விசா வழங்குவதற்கான பணிகள் விரைந்து நடந்து வருவதாகவும், கொரோனா தொற்றுக்கு முன்பு இருந்த நிலை விரைவில் எட்டும் என்றும் அமெரிக்க உள்துறையும் சமீபத்தில் தெரிவித்து இருந்தது. இன்னும் சில நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் நீடித்து வருவதாலும், விசா நேர்காணலுக்கு நேரில் ஆஜராகும் நபரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் இருப்பதால் விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக காரணம் கூறப்படுகிறது.

click me!