Covid Cases in China: கவலையில் சீனா! விடாமல் துரத்தும் கொரோனா !3 வாரத்தில் 2.53 லட்சம் பாதிப்பு

By Pothy Raj  |  First Published Nov 23, 2022, 12:51 PM IST

சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் மீண்டும் பல நகரங்கள் ஊரடங்கில் மூழ்கியுள்ளன. கடந்த 3 வாரங்களில் மட்டும் சீனாவில் 2.53 லட்சம்பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் மீண்டும் பல நகரங்கள் ஊரடங்கில் மூழ்கியுள்ளன. கடந்த 3 வாரங்களில் மட்டும் சீனாவில் 2.53 லட்சம்பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக கொரோனாவில் உயிரிழப்பு இல்லாமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டு இதுவரை 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

அதிகரி்த்துவரும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நகரங்களில் பூங்காங்கள், ஷாப்பிங் மால்கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட சாயோங் மாவட்டத்தில் முழுமையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுல்ளது, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://tamil.asianetnews.com/world/indonesia-earthquake-death-reaches-252-still-more-missing-report-rlqyf4

சாயோங் மாவட்டசுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் “ 3.50 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் வீடுகளில் முடங்கியுள்ளார்கள்” எனத் தெரிவி்த்தனர். தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் திங்கள்கிழமை 1400 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், சாயோங்கில் 783 பேர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டபின், தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பரவல் 1000 பேருக்கு மேல் ஏற்படுவது இதுதான் முதல்முறையாகும். 

ஹூ ஜியாங் நகர தேசிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் கூறுகையில் “ சீனாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கிறது. சில நகரங்களில் கொரோனா ஆரம்பகாலத்தைப் போல் தீவிரமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதும், தடுப்பதும் கடினமாக இருப்பதால், தொடர்ந்து அதிகரித்து வருகிறது”எனத் தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா பரவல் கடந்த 1ம் தேதி முதல் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுவரை 2.53 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளன்ர. தினசரி 22,200 பேர் கொரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள் என அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

:கலக்கத்தில் சீனா! அதிகரிக்கும் கொரோனா! 100 ஆண்டு பழமையான ஜிஜியாங் நாடக அரங்கு மூடல்

அதிகரித்துவரும் கொரோனா பரவில் இருந்து பாதுகாக்க, பெய்ஜிங் நகரில் வாழும் மக்கள், கண்டிப்பாக நியூசிலிக் பரிசோதனையை எடுக்க வேண்டும் என்று நகர நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பரிசோதனையில் நெகட்டிவ் வந்த மக்கள் மட்டுமே கடைகள், ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.

தெற்கு சீனாவின் குவாங்ஜூ நகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 257 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் அறிகுறி இல்லாத கொரோனா தொற்றாகவே மக்களுக்கு இருப்பதால் கண்டறிவதில் சிரமம் இருந்து வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெய்ஜிங் நகர் அருகே இருக்கும் தியாஜின் நகராட்சி அங்குள்ள மக்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய முன்வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல ஹீபி மாகாணத்தின் தலைநகர் ஷியாஜியாஹுவாங் நகரிலும் மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு: இதனால் இந்தியாவுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்? முக்கியத்துவம் என்ன?

சீனாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவது அரசுக்கும், மக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப்பின் சீனாவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 28ஆயிரம்பேருக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டனர். 

சீனாவில் பரவும் கொரோனாவில் ஒமைக்ரான் வைரஸின் திரிபான ஒமைக்ரான் பிஎப்.7 என்பது குறி்ப்பிடத்தக்கது. 

click me!