நேபாளத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷெர் பகதூர் தூபா தாதேல்துரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சி 46 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
நேபாளத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷெர் பகதூர் தூபா தாதேல்துரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சி 46 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
நேபாளத்தில் உள்ள 275 தொகுதிகளுக்கான நாடாளமன்றத் தேர்தல் கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்தது. இது தவிர 7 மாகாண சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடந்தது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகளும் தொடங்கின.
நாடாளுமன்றத்தில் உள்ள 275 உறுப்பினர்களில் 165 பேர் நேரடியாக வாக்கு எண்ணிக்கை மூலமும், மற்றவர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 550 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைகளில் 330 பேர் நேரடியாகவும், 220 பேர் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்தத் தேர்தலில் ஆளும் நேபாள காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் பிரதமர் கேபி.ஷர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தூபா மேற்கு நேபாளத்தில் உள்ள தெல்துரா தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் ஷெர் பகதூர் 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
Twitter-ரை தொட்ட கெட்ட!எலான் மஸ்க்கிற்கு தினசரி ரூ.2,500 கோடி இழப்பு! 10,000 கோடி டாலர் நஷ்டம்
சுயேட்சை வேட்பாளர் சகர் தாக்கலுக்கு எதிராக 25,334 வாக்குகள் பெற்று ஷெர் பகதூர் தூபா வெற்றி பெற்றுள்ளார். ஷெர் பகதூர் தூபா தனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஒருமுறைகூட நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஷெர் பகதூர் தூபா 5வது முறையாக நாட்டின் பிரதமர் பதவியில் உள்ளார்.
தற்போது ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி 46 இடங்களில் முன்னிலை பெற்று, பிரதிநிதிகள் சபைக்கு 10 இடங்களை வென்றுள்ளது. எதிர்க்கட்சியான ஷர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் சபைக்கு 3 இடங்களை வென்று, 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.