ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கு தலைவர் பதவி என்பது ஆங்கில அகரவரிசைப்படி சுழற்ச்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் மிகவும் அரிதாகவே சரியான நாட்டிடம், சரியான நேரத்தில், சரியான இடத்தில் உள்ள சரியான தலைவரிடம் தலைவர் பொறுப்பு வரும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளுக்கு தலைவர் பதவி என்பது ஆங்கில அகரவரிசைப்படி சுழற்ச்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் மிகவும் அரிதாகவே சரியான நாட்டிடம், சரியான நேரத்தில், சரியான இடத்தில் உள்ள சரியான தலைவரிடம் தலைவர் பொறுப்பு வரும்.
அந்த வகையில் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக இந்தியா டிசம்பர் 1-ம் தேதிமுதல் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்கிறது. ஜி20 நாடுகள் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்பது சரியான தருணம். முறைப்படி தலைவராக பொறுப்பேற்கும் முன்பே, இந்தியாவின் பிரதிநிதிகள் பாலி உச்சி மாநாட்டில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.
undefined
பாலி உச்சி மாநாட்டில் இந்தியா தரப்பில் இருந்து மிகவும் உயர்ந்த அளவிலான கருத்துகள் பல்வேறு தருணங்களில் எழுந்தன. மிகவும் முக்கியமான விஷயங்களில் விவாதத்தின்போதும், ஆலோசனையின் போதும் இந்தியா நடுநிலை வகித்தது.
Russia Putin:ரஷ்ய அதிபர் புடின் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் ஏன் ஒதுங்கினார்? காரணம் என்ன?
பேச்சுவார்த்தையில்தான் எந்த விஷயத்திலும் தீர்வு காண வேண்டும், பகையை நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடக்கத்தில் இருந்தே நிலைப்பாடாக வைத்திருந்தது. பாலி உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் பங்கேற்கவில்லை, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்றாலும் அவர் ஒதுங்கியே இருந்தார்.
டிசம்பர் 1ம் தேதி முதல் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்கிறது. இந்தியா மஸ்தியஸ்தராக இருந்து, சர்வதேச அளவில் முயற்சிகள் எடுத்து எந்தவிதமான போரும் நடக்காமல் தடுக்க வேண்டும்.
இந்தியா மஸ்தியஸ்தராக இல்லாவிட்டாலும் நேட்டோவும், அமெரிக்காவும், இந்தியாவை பேச்சுவார்த்தையில் ஒரு கருவியாகவே பார்க்கும். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் நிகழும் எந்தத் தோல்வியும் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தம் என்பதால் கவனமாகப் பயணிக்க வேண்டும்.
இந்தியா தலைவராக வருவதால் இந்தியாவின் நற்பெயரைக் கெடுக்கவும், நெருக்கடியை ஏற்படுத்தவும் சீனா கடுமையாக முயற்சிக்கும். மிகவும் கடினமான பரிசோதனைக் காலத்துக்குள்தான் இந்தியா தலைவர் என்ற பதவிக்குள் நுழைகிறது.
சீனாவின் வாழ்நாள் தலைவராக வந்தபின் பாலி உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றார். உச்சி மாநாட்டுக்கு ஜி ஜின்பிங் வந்ததும் புகைப்படம் எடுத்தல், பேச்சுவார்த்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றார்.
சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், தைவானில் அத்துமீறி போர் பயிற்சி போன்றவற்றை சீனா செய்தாலும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் மாநாடு முடியும் வரை சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு அவ்வப்போது தொடர்ந்தது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பல தலைவர்களும் தங்களுக்குரிய பிரச்சினைகளை குறைகளை எழுப்பினர். 2016ம் ஆண்டுக்குப்பின் ஜி ஜின்பிங்கை சந்தித்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ், “சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது” என தெரிவித்தார். அதேசமயம், “சீனாவில் தடுப்புக்காவலில் இருக்கும் ஆஸ்திரேலிய மக்களை விடுவிக்கும்படியும், மனித உரிமை மீறல்கள்” குறித்தும் சுட்டிக்காட்டினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான், உக்ரைன், ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்தால் அடுத்த ஆண்டு சீனா செல்வதாகவும் மேக்ரான் தெரிவித்தார்.
இந்த ஜி20 மாநாடு என்பது இந்த முறையும் புவிஅரசியல் சார்ந்தே இருந்தது. ஆனால், முக்கியமாகப் பேசப்பட வேண்டிய “உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாறுபாடு” குறித்து பேச இந்தோனேசியா விரும்பியது.
ஆனால், உச்சி மாநாட்டின் முதல்நாளில் அமெரி்க்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு கவனத்தை ஈர்த்தது. 2வது நாளில் போலந்து நாட்டின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வந்தன. இதனால் ஜி20 மாநாடு சிறிது நேரத்தில் ஜி-7 மாநாடாக மாறி ஜி7 நாடுகள் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
பாலி உச்சி மாநாட்டின் தீர்மானத்தின் மையக் கருவாக இருந்தது “உக்ரைன் மீதான ரஷ்யப் போரைக் கண்டித்தலாகும், ரஷ்யாவுக்கும் கண்டனம் தெரிவித்ததாக” இருந்தது.
பெரும்பாலான நாடுகள் உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கோரஷம் மிக்க போரையும், மனிதர்களுக்கான பாதிப்பையும், உலகப் பொருளாதார பாதிப்பையும், வளர்ச்சி சீர்குலைவு, பணவீக்கம் உயர்வு, சப்ளையில் தடை, உணவு மற்றும் எரிபொருள் சப்ளையில் பாதுகாப்பின்மையை சுட்டிக்காட்டி உலக நாடுகள் கண்டித்தன.
பருவநிலை மாறுபாடு என்ற விஷயத்துக்கு வரும்போது, உலகின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்க தேவையான முயற்சிகளை எடுப்போம் என்று உலக நாடுகள் தெரிவித்தன. அது மட்டுமல்லாமல் நிலக்கரி பயன்பாட்டையும் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தன.
பாலி உச்சி மாநாட்டில் வழக்கமாக எடுக்கப்படும் குடும்ப புகைப்படம் கூட எடுக்கப்படவில்லை. ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு இடையே அசவுகரியான சூழல் இருந்ததால், கூட்டாக ஒருமித்த உணர்வோடு புகைப்படம் எடுக்கவில்லை.
எல்லா ரகசியமும் லீக்.. கனடா பிரதமரை வெளுத்து வாங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங் - வைரல் வீடியோ !
ஜி19 நாடுகள் சந்திப்பு என்று ரஷ்யாவின் புறக்கணிப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விமர்சித்தார். ரஷ்யா மீதான கண்டனத் தீர்மானத்தின்போது சீனாவும், இந்தியாவும் புறக்கணித்து ஒதுங்கின.
ஜி 20 தலைவர் பதவி இந்தியாவுக்கு கிடைத்துள்ளதை பயன்படுத்திக் கொள்ள, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தயாராகி வருகிறது.
அடுத்த ஆண்டு உச்சி மாநாடு மற்றும் நிகழ்ச்சிகள் என அற்புதமான ஆண்டை எதிர்நோக்கி உள்ளன.
2024ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் ஜி20 தலைவராக இந்தியா பொறுப்பேற்பதால், ஆளும் பாஜகவுக்கு இந்த வாய்ப்பு வரப்பிரசாதமாக இருக்கும். ஆனால் எந்த நாடுகளுக்கும் இடையே போர் நடக்காமல் தடுக்க வேண்டும், போர் தொடர்ந்தாலும், நடந்தாலும் மற்றும் உலகப் பொருளாதாரம் சரிந்தாலும், தலைவராக இருக்கும் இந்தியா ஓரளவுக்கு பொறுப்பும் ஏற்க வேண்டும்.
மறுபுறம், சீனா, எந்த சுமை இல்லாமல், தங்கள் நோக்கங்களை நிறைவேற்ற தீவிரமாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, ஜி20 நாடுகளுக்கு தலைவராகும் வாய்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால் சவால் நிறைந்தது