இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தோனேசியா நாட்டின் மேற்கு கலிமந்தன் மாகாணம் பென்ங்கயங் மாவட்டம் Kinande கிராமத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் வியாழக்கிழை இரவு நிலச்சரிவு ஏற்பட்டதால், தங்கம் வெட்டி எடுக்க வேலையில் ஈடுபட்டு இருந்த 20 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.
மேலும் படிக்க:china building:சீனாவில் 42 மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து !கரும்புகை,விண்ணை முட்டிய தீ பிளம்பு வீடியோ
undefined
ஆனால் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத இடம் என்பதால், விபத்து குறித்து வெள்ளிக்கிழமை இரவு தான் மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் மண்ணுக்குள் புதைந்த 20 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ராணுவ வீரர்கள், பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர், கிராம மக்களும் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் தங்கச்சுரங்கள் உள்ளன. இதில் சில சுரங்கங்களில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக தங்கம் வெட்டி எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் பிரதமர் மோடி... உணவு, எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை!!