கோலி, தோனி, அஸ்வினுக்கு கோடிகளில் சம்பளம் - அள்ளிக் கொடுத்தது பி.சி.சி.ஐ.

Asianet News Tamil  
Published : Mar 22, 2017, 10:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
கோலி, தோனி, அஸ்வினுக்கு கோடிகளில் சம்பளம் - அள்ளிக் கொடுத்தது பி.சி.சி.ஐ.

சுருக்கம்

Kohli Dhoni asvin million salary - Was bestowed BCCI

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோனிக்கு ஆண்டு ஊதியத்தை ரூ. 2 கோடியாக உயர்த்தி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.

மேலும், பெரும்பாலான வீரர்களின் ஊதியத்தையும் உயர்த்தி உயர் சம்பளப் பிரிவுக்கு மாற்றி உள்ளது பி.சி.சி.ஐ. ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், சட்டீஸ்வர்புஜாரா ஆகியோரும் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளம் பெற உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்தத்தை முடிவு செய்து, பி.சி.சி.ஐ. அமைப்பு வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் வரும் செப்டம்பர் மாதம் முடியும் நிலையில், இந்த புதிய ஒப்பந்தம்வௌியிடப்பட்டுள்ளது.

இதில் ‘ஏ’பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2கோடி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விராத் கோலி, தோனி, அஸ்வின், அஜின்கயே ரகானே, சட்டீஸ்வர் புஜாரா, ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய் இடம் பெற்றுள்ளனர்.

பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல்,புவனேஷ்குமார், முகமது ஷமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், விர்திமான் சாஹா, ஜஸ்பிரித் பும்ரா, யுவராஜ் சிங்ஆகியோர் உள்ளனர்.

சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதில், சிகார்தவான், அம்பதி ராயுடு, அமித் மிஸ்ரா, மணிஷ் பாண்டே,அக்சர் படேல், கருண் நாயர், ஹர்திக் பாண்டயா, ஆஷிஸ் நெஹ்ரா, கேதர் ஜாதவ், யுவேந்திர சாஹல், பர்திவ் படேல், ஜெயந்த் யாதவ், மன்தீப் சிங், தவால் குல்கர்னி, சர்துல் தாக்கூர், ரிஸாபா பந்த் இடம் பெற்று இருக்கிறார்கள்.

மேலும், ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால் ரூ.15 லட்சம், ஒரு நாள் போட்டிக்கு தலா ஒரு போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் அனைத்தும் அக்டோபர் 2016ம் ஆண்டு முன்தேதியிட்டு வழங்கப்படும்.

இவ்வாறு பி.சி.சி.ஐ.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவுல இல்லப்பா.. துபாய்ல இருக்கேன்! ஓஸ்மான் ஹாதி கொலைக் குற்றவாளி வெளியிட்ட வீடியோவால் போலீஸ் அதிர்ச்சி!
நாங்கதான் பஞ்சாயத்து பண்ணோம்! டிரம்ப்பைத் தொடர்ந்து சீனா போட்ட புது குண்டு.. கடுப்பான இந்தியா!