
பன்னாட்டு அளவில், செலவினங்கள் குறைவாக உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட நான்கு இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சென்னைக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.
உலக அளவில், செலவினம் குறைவாக உள்ள 10 நகரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் அல்மாட்டி நகரம் உள்ளது. இந்திய அளவில் 4 நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பெங்களூரு மூன்றாவது இடத்திலும். சென்னை ஆறாவது இடத்திலும், மும்பை ஏழாவது இடத்திலும், டெல்லி பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் கராச்சி 4 ஆவது இடத்திலும் அல்ஜியர்ஸ் 5 ஆவது இடத்திலும், கீவ் 8 ஆவது இடத்திலும் இருக்கின்றன. பச்சாரெஸ்ட் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், அதிக செலவினம் ஏற்படுத்தும் நகரமாக சிங்கப்பூர் உருவாகியுள்ளது.இந்த வரிசையில் ஹாங்காங் இரண்டாவது இடத்திலும், ஜுரிச் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் இந்திய நகரங்கள் பற்றியும் இந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இங்கு 46,000 கோடீஸ்வரர்கள் வசிக்கின்றனர். இவர்களுடைய ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பு 82,000 கோடி டாலர். இரண்டாவது இடத்தில் டெல்லியும், மூன்றாவது இடத்தில் பெங்களூருவும் உள்ளன,