அமெரிக்காவுக்கு லேப்டாப், ஐபேட் கொண்டு செல்ல அதிரடி தடை....

Asianet News Tamil  
Published : Mar 21, 2017, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
அமெரிக்காவுக்கு லேப்டாப், ஐபேட் கொண்டு செல்ல அதிரடி தடை....

சுருக்கம்

trump new ban

அமெரிக்காவிற்கு செல்லும் போது ஒரு சில  எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்வதற்கு அதிரடியாக  தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராயல் ஜோர்டான் எர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  எகிப்து,  ஜோர்டான், குவைத், மொராக்கோ, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து வரும் விமானங்களுக்கு மட்டும் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் செல்போன் மற்றும் மருத்துவ கருவிகளை எடுத்து செல்வதற்கு  எந்த விதமான  தடையும் கிடையாது என அசோசியேடட் பிரஸ்ஸுக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர்  விளக்கம் தந்துள்ளார் .  

எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி , சரியான  விளக்கத்தையும் கூறாமல்  திடீரென அறிவித்த இந்த  அறிவிப்பால் , பயணிகள்  அதிர்ச்சியில் உள்ளனர்.

அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால், உலகளாவிய விமான சேவை பயன்படுத்தும் பயணிகளை வெகுவாக பாதிக்கும் என பிரபல ராயல் ஜோர்டான் ஏர்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவுல இல்லப்பா.. துபாய்ல இருக்கேன்! ஓஸ்மான் ஹாதி கொலைக் குற்றவாளி வெளியிட்ட வீடியோவால் போலீஸ் அதிர்ச்சி!
நாங்கதான் பஞ்சாயத்து பண்ணோம்! டிரம்ப்பைத் தொடர்ந்து சீனா போட்ட புது குண்டு.. கடுப்பான இந்தியா!