இவர் மைக்கேல் ஜாக்சனுக்கெல்லாம் தந்தை.... சகாப்தத்தை நிறைவு செய்த 'Rock n Roll' மன்னன்

First Published Mar 19, 2017, 9:46 AM IST
Highlights
Chuck Berry who with his indelible guitar licks died on Saturday


அமெரிக்காவின் புகழ்பெற்ற ராக் இசைப் பாடகர் ஜக் பெரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 90…

யார் இந்த பெஃரி

அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் உள்ள புனித லூயிஸ் நகரில் கடந்த 1926 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி கருப்பின தம்பதிகளுக்கு 4 ஆவது மகனாப் பிறந்தார் ஜக் பெரி…நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெரிக்கு படிப்பை விட கிட்டாரின் மேலும்,பாடல் எழுதுவதிலும் அலாதி விருப்பமாக இருந்தது.

இவரது தந்தை கான்டரக்டர் என்பதால் இசைக்கருவிகளை வாங்குவதற்கு பெஃரிக்கு ஏதும் சிக்கல் எழுந்ததில்லை.ஆண்டுகள் உருண்டோடின.அதற்கு ஏற்ப இவரது இசைத்திறமையும் மெருகேறியது.

கள்வனில் இருந்து கலைஞனான கதை

அது 1944 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம். அப்போது பெரி அங்குள்ள பள்ளியில் கல்வி பயின்று வந்தார். அப்போது தனது சகமாணவர்களுடன் துப்பாக்கி முணையில் கடை ஒன்றில் கொள்ளையடித்து விட்டு காரை கடத்தி தப்பிச் சென்றார். ஆனால் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த பெரிக்கு சிறைவாசம் இசை சுவாசத்தை ஆழமாக ஊட்டியது என்றே சொல்லலாம்..

இவரது மயக்கும் குரள்வளத்தையும், கிடாரில் இவரது கைவிரல்கள் விளையாடுவதைப் பார்த்தும் அதிசியத்த அதிகாரிகள், சிறைச்சாலைக்கு வெளியேயும் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தனர். நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பே அதாவது 1947 ஆம் ஆண்டு 21 பிறந்தநாளிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

திருமணமும் போராட்டமும்

1948 ஆம் ஆண்டு திமெட்டா என்பவரை கரம் பிடித்தார் பெரி.. இவர்களின் தாம்பத்ய வாழ்விற்கு பரிசாக டார்லின் என்ற மகளும் பிறந்தாள்… அதன் பிறகே இவர் வாழ்வில் வறுமை வாட்டியெடுத்தது. சிறையில் இருந்து வந்தவன், கருப்பினத்தைச் சேர்ந்தவன் என்ற அவச் சொல்… எங்கு சென்றாலும் விரட்டி அடித்தது. தொழிலாளி, அழகுக் கலை நிபுணர், என எந்த வேலையும் இவருக்கு கை கொடுக்கவில்லை…

வாழ்வை மாற்றியமைத்த கிட்டார்

விரக்தியின் உச்சத்திற்கு சென்ற போது இவரை கைதூக்கி விட்டது கிட்டார். தனது குரல் வளம் மீதும் கிடார் மீதும் பெரும் நம்பிக்கை கொண்டு உள்ளூர் இசைக்குழுவிலும், மதுபான விடுதிகளிலும் முழங்கத் தொடங்கினர். யார் அந்த கருப்பின இளைஞன், பிரமாதாகப் பாடுகிறேனே! என்ற விவாதங்கள் மிசூரி மாகாணம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. 1955 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தனது வாழ்க்கையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பெரி அப்போது உணர்ந்திருக்கவில்லை…

எப்போதும் போல ஸ்டூடியோவுக்குச் சென்ற அவர் தனது புதிய பாடலான “Maybellene” to “Come On ஐ பாடிவிட்டு சென்று விட்டார். ஆனால் இவரின் இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் வைரல் ஹிட்டடிக்கத் தொடங்கியது. பெரிக்கே ஆச்சரியம். தன்னையும் ஹீரோவாக மக்கள் பார்க்கத் தொடங்கியதைக் கண்டு அவரது கண்கள் குளமாகத் தொடங்கிய கால கட்டம் அது…

Roll Over Beethoven, Rock And Roll Music, Johnny B. Goode, Rythem And Blues என இவரது படைப்புகள் அனைத்தும் 20 ஆம் நூற்றாண்டு மக்களால் கொண்டாடப்பட்டவை. ஏறத்தாள 90 வருடங்கள் இசையை மட்டுமே சுவாசித்து வந்த பெஃரி தனது சப்த சுவஸரங்களை நிறுத்தி நித்திரை அடைந்துள்ளார். ஆம் வயோதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரி தனது இல்லத்தில் நேற்று உயிரிழந்தார்.

21 ஆம் நூற்றாண்டு மக்களுக்கு மைக்கேல் ஜாக்சன்

20 ஆம் நூற்றாண்டு மக்களுக்கு ஜக் பெரி……

அவ்வளவே வித்தியாசம்….

click me!