
எலியை ஒழிக்க 150 கோடி கொசுவை ஒழிக்க எத்தனை கோடி
இந்தியாவில் மட்டும் தான் எலிகளின் அட்டூழியம் என்றால் அயல்நாட்டிலும் விட்டு வைக்க வில்லை. பிரான்ஸ் தலைநகரம் பாரீசில் எலிகளை ஒழிக்க 150 கோடி ஒதுக்கியுள்ளனர்.
பாரீசில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் மற்றும் அனைத்து வீதிகள், குப்பைகிடங்குகள், சாக்கடை கால்வாய்கள், திறந்த வெளியிடங்களில் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பொருட்களை பெருமளவில் சேதம் விளைவிக்கும் எலிகளை ஒழித்துக்கட்ட அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து பாரீஸ் அரசு எலிகளை ஒழிக்க 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக பாரீஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால்கோ அறிவித்துள்ளார்.
எலியை ஒழிக்க 150 கோடி என்றால் கொசுவை ஒழிக்க எத்தனை கோடியோ…