
லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலத்த காயமடைந்தது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் 200 எம்பிக்களும் கட்டிடத்திற்கு உள்ளேயே பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன. வெஸ்ட் மின்ஸ்டர் பாலம் அருகே அரண்மனை மைதானத்தில் மர்ம நபர் கையில் கத்தியோடு இருந்ததாகவும், படுகாயமடைந்த சிலருக்கு சிகிச்சைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து லண்டன் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. லண்டனில் போக்குவரத்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.