கிம்-ஜாங் உன்-ன் ஆடம்பர ரயிலில் இத்தனை வசதிகளா? புடினின் சொகுசு ரயிலில் கூட இந்த வசதிகள் இல்லையாம்

By Ramya s  |  First Published Sep 12, 2023, 1:32 PM IST

4 ஆண்டுகளுக்குப் பிறகு கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடகொரியத் அதிபர் கிம் ஜாங்-உன் விளாடிவோஸ்டோக்கில் அதிபர் விளாடிமிர் புடினுடன் உச்சிமாநாட்ல் கலந்து கொள்வதற்காக ரஷ்யா சென்றுள்ளார். வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் இருந்து தனது சொகுசு பாதுகாப்பு ரயிலில் பயணம் மேற்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய தலைவர்கள் பின்பற்றும் நீண்டகால பாரம்பரியத்தின்படி, மெதுவாக நகரும் பச்சை மற்றும் மஞ்சள் ரயிலில் 1,180 கிமீ (733 மைல்கள்) 20 மணி நேரம் ரயிலில் பயணித்துள்ளார். சர்வதேச பயணங்கள் என்றாலே அவர் ரயில் பயணங்களையே விரும்புவார். கிம்மின் ரயில் பலத்த பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலாகும். இது பெரும்பாலான நவீன ரயில்களை விட மிகவும் மெதுவாக பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

Tap to resize

Latest Videos

90 பெட்டிகளைக் கொண்ட அடர் பச்சைநிற ரயிலில், யார் பயணிக்கிறார்கள் என்பதை மறைக்க வண்ண ஜன்னல்கள் உள்ளன. மேலும் குண்டு துளைக்காத வகையில் பாதுகாப்பு வசதிகள் உள்ளன. கிம்மின் இந்த சொகுசு ரயிலின் எடை ஆயிரக்கணக்கான பவுண்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உக்ரைன் மீது போர் தொடுக்க வடகொரியாவிடம் ஆயுதங்கள் வாங்கும் ரஷ்யா; தனி ரயிலில் மாஸ்கோ சென்ற கிம் ஜாங் உன்!!

விலையுயர்ந்த பிரெஞ்ச் ஒயின் மற்றும் நண்டு மற்றும் பன்றி இறைச்சி பார்பிக்யூவைக் கொண்டு செல்லும் உணவகமும் இந்த ரயிலில் உள்ளது. இது தவிர, ரயிலில் மாநாட்டு அறைகள், பார்வையாளர்கள் அறைகள் மற்றும் படுக்கையறைகள் உள்ளன, செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் பிளாட்-ஸ்கிரீன் தொலைக்காட்சிகளும் நிறுவப்பட்டுள்ளன.

ரயில் பயணத்தின் பாரம்பரியம்

கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல் சுங் வியட்நாம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு ரயில் பயணங்களைச் செல்லத் தொடங்கிய பிறகு ரயில் மூலம் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் பாரம்பரியத்தைத் தொடங்கினார். கிம் ஜாங் உன்னின் தந்தையும் வடகொரிய முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல், வெளிநாடுகள் செல்ல பயந்தவர் என்று கூறப்படுகிறது. அவர் ஒருமுறை 2001 இல் புடினுடன் ஒரு சந்திக்க மாஸ்கோவிற்குச் செல்ல 10 நாட்கள் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு படையினர் அதிகமானோர் இந்த சொகுசு ரயில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டுகள் மற்றும் பிற அச்சுறுத்தல்களை தவிர்க்க ரயில் பாதைகள் மற்றும் நிலையங்களை சோதனை செய்து வருகின்றனர். 

வட கொரியாவின் தற்போதைய அதிபரான கிம் ஜாங் உன், தனது குடும்ப பாரம்பரியத்தைத் தொடர்கிறார், மேலும் இந்த சொகுசு கவச ரயில் விமானத்தை விட அதிக பாதுகாப்பையும் ஆடம்பரத்தையும் வழங்குகிறது என்று அவர் நம்புகிறார்.

கிம் ஜாங் உன் ஒருமுறை ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்காக வியட்நாம் சென்றடைவதற்கு தனது ரயிலில் சீனா வழியாக சுமார் 4,500 கிலோமீட்டர் பயணம் செய்தார். இந்த பயணத்திற்கு இரண்டரை நாட்கள் ஆனது.

இதனிடையே ரஷ்ய ராணுவத் தளபதி கான்ஸ்டான்டின் புலிகோவ்ஸ்கி கிம் ஜாங் உன் ரயிலின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிப் பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “  ரயிலில் ரஷ்ய, சீன, கொரிய, ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு உணவு வகைகளை" ஆர்டர் செய்வது குறித்தும் அவர் வியந்து பாராட்டினார். மேலும் ரஷ்ய அதிபர் புடினின் தனிப்பட்ட ரயிலில் கூட "கிம் ஜாங் இல்லின் ரயிலின் வசதி இல்லை" என்று புலிகோவ்ஸ்கி குறிப்பிட்டார்.

உக்ரைனில் நடந்து போருக்காக பீரங்கி குண்டுகள் மற்றும் ஆண்டி-டாங்க் ஏவுகணைகளை வட கொரியாவிடம் இருந்து வாங்க ரஷ்ய அதிபர் புடின் முயற்சிப்பதாக என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், அதே நேரம் செயற்கைக்கோள்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தேசத்திற்கான உணவு உதவி ஆகிய உதவிகளை ரஷ்ய அதிபரிடம் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. கிம் - புடின் உடனான இந்த சந்திப்பில் வடகொரிய அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் உள்ளனர்.

click me!