டெல்லியில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு முழு வெற்றியை பெற்றது: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு!!

By Dhanalakshmi G  |  First Published Sep 12, 2023, 10:58 AM IST

டெல்லியில் நடந்து முடிந்திருக்கும் ஜி20 உச்சி மாநாடு முழு வெற்றி பெற்றுள்ளது என்று அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.


டெல்லியில் செப்டம்பர் 9, 10  ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு இருந்தனர். பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அதாவது சீனாவின் சில்க் ரோடுக்கு சவால் விடும் வகையில் ஐரோப்பியா, சவுதி அரேபியாவை இந்தியாவுடன் இணைக்கும் துறைமுகம் மற்றும் சாலை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்த மாநாடு குறித்து அமெரிக்க உள்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் அளித்திருக்கும் பேட்டியில், ''டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாடு முழு வெற்றியை பெற்றுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். ஜி20 அமைப்பு என்பது மிகப் பெரியது. இந்த அமைப்பில் ரஷ்யாவும், சீனாவும் உறுப்பு நாடுகளாக உள்ளன'' என்றார்.

Tap to resize

Latest Videos

பிராந்திய மற்றும் உலக ஸ்திரத்தன்மைக்கு இந்தியா, சவுதி கூட்டாண்மை முக்கியம்: பிரதமர் மோடி!!

ரஷ்யா ஏன் கலந்து கொள்ளவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ''உறுப்பு நாடுகளில் சிலர் தங்களுக்கு என்று வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டு இருக்கின்றனர். பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்று இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அந்தக் கொள்கைகளை மீறக்கூடாது என்பது முக்கியமானது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பும் இதைத்தான் காட்டுகிறது'' என்றார். 

"அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று G20 நாடுகள் சனிக்கிழமையன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பிரகடனப்படுத்தினர். உக்ரைன் போரை மறைமுகமாக குறிக்கும் வகையில் தலைவர்கள் இந்த பிரகடனத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 

புவிசார் அரசியல் பிரச்சினைகள் ஜி20-யை பாதிக்கக் கூடாது: பிரேசில் அதிபர்!

ரஷ்யாவைக் குறிப்பிடாமல், G20 உறுப்பு நாடுகள் பாலி பிரகடனத்தை நினைவு கூர்ந்தன. மேலும் அனைத்து உறுப்பு நாடுகளும் ஐ.நா., வின் உத்தரவின்படி கோட்பாடுகளுக்கு இணங்கி செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. ''உக்ரைனில் நீடித்த அமைதிக்கு" இந்த மாநாட்டில் அழைப்பு விடப்பட்டது. உறுப்பு நாடுகள் அச்சுறுத்தலை கைவிட வேண்டும். படைகளை பயன்படுத்தி பிராந்திய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

டெல்லையில் நடந்த G20 மாநாட்டில் எடுக்கப்பட்ட பிரகடனத்தின் மூலம், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை தளம்  G20 மாநாடு தான் என்பது உறுதி செய்யப்பட்டது. G20 புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கான தளம் அல்ல என்பதையும் உறுப்பு நாடுகள் உணர்ந்து கொண்டன. இந்த பிரச்சினைகள் உலகப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்புகின்றனர். 

முதன் முறையாக இந்தியாவில் நடந்த  G20 உச்சி மாநாட்டில், ஒருங்கிணைந்த வளர்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, காலநிலை பின்னடைவு மற்றும் சமமான உலகளாவிய சுகாதார அணுகல் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் இந்தியா கவனம் செலுத்தியது.

click me!