ஜப்பானியர்கள் 100 வயசையும் தாண்டி வாழ்வதற்கான ரகசியம் இதுதாங்க..!!

Published : May 27, 2024, 12:35 PM ISTUpdated : May 27, 2024, 12:49 PM IST
ஜப்பானியர்கள் 100 வயசையும் தாண்டி வாழ்வதற்கான ரகசியம் இதுதாங்க..!!

சுருக்கம்

ஜப்பானியர்கள் எப்படி நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று எப்பவாவது யோசித்திருக்கிறீர்களா..? அவர்களின் வாழ்க்கை தொடர்பான சில சுவாரசியமான உண்மைகளை இங்கே அறிந்து கொள்ளுங்கள்..

100 வயசு வரை வாழ என்ன வழி..?அதற்கு என்ன செய்ய வேண்டும்..? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் இந்த உலகில் ஒருவர் கூட இல்லை. நாம் ஒவ்வொருவரும், ஆரோக்கியமாகவும், 100 (அ) அதற்கு மேல் வாழ வேண்டும் என்று நினைப்போம். ஆனால், சோகமான விஷயம் என்னவென்றால், மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களால், நம்முடைய ஆயுட்காலம் குறைகிறது.

இன்றைய காலகட்டத்தில், ஒருவர் 60 வயசு வரை வாழ்வதே பெரிய விஷயம். இருப்பினும், உலகில் பல இடங்களில் 100 ஆண்டுகள் வரை வாழும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு நாட்டில் மட்டும் 100 (அ) அதற்கு மேல் வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக வாழ்வோரின் எண்ணிக்கை, அதிகமாகவே உள்ளது  என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆனால், அதுதாங்க உண்மை.. அது வேறு எந்த நாடும் இல்லங்க.. ஜப்பான் தான்.  மற்ற நாட்டை காட்டிலும் ஜப்பான் நாட்டில் தான் நூறு வயதை கடந்தும் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ஜப்பானியர்களைப் பார்த்து அவர்களின் வயதைக சுலபமாக கணிக்க முடியாது. ஏனெனில், இங்கு வயதானவர்கள் கூட பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தான் இருப்பார்கள். இதற்குக் காரணம், அவர்களின் வாழ்க்கை முறையின் ரகசியம். அதனால்தான் ஜப்பானில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றது. சரி வாங்க, இப்போது ஜப்பானியர்களின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

இதையும் படிங்க:  Friendship Marriage : ஜப்பானில் டிரெண்டாகும் இந்த திருமணத்தில் காதல் காமத்துக்கு மட்டும் 'நோ'.. ஏன் தெரியுமா?

ஜப்பானியர்களின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம்:

ஜப்பானியர்கள் 100 வயசுக்கு மேல வாழ்வதற்கான முதல் ரகசியம் என்னவென்றால், அவர்களது சாப்பாட்டு முறை தான். ஜப்பானிய கலாச்சாரத்தில் புளித்த உணவுகள் தான் பெரும்பாலும் உண்ணப்படுகின்றன. உதாரணமாக, பழைய சோறு, கேப்பங்கூழ், கம்பங்கூழ் போன்றவை ஆகும். அதுபோல, அவர்கள் வேகவைத்த உணவையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், அவர்கள் வறுத்த உணவை சாப்பிடுவதில்லை. காரணம், இது குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அதுபோல, ஜப்பானியர்கள் முடிந்த அளவிற்கு எங்கு சென்றாலும் நடந்தே தான் செல்வார்களாம்.தேவைப்பட்டால் சைக்கிளை செல்வார்கள். அவர்கள் தூரமான இடங்களுக்கு மட்டுமே வாகனம் அல்லது போக்குவரத்தை  பயன்படுத்துவார்களாம். இதனால் அவர்களின் உடல் செயல்பாடு அதிகரிக்கிறது, உணவு எளிதில் ஜீரணமாகிறது மற்றும் எடையும் கட்டுப்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: ஜப்பானில் விநாயகர் கோயில் இருக்கா..? ஆச்சரியமூட்டும் உண்மைகள் இதோ!

பொதுவாக நாம் விடும் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் தாமதமாக தூங்கி எழுவது, சாப்பிடுவது, டிவி மொபைல் போனில் நேரத்தை செலவிடுவது, ஊர் சுற்றுவது, பிறகு மீண்டும் தூங்குவது என இப்படியே இருப்போம். ஆனால், ஜப்பானியர்களோ.. தொலைதூர இடங்களுக்கு சென்று தங்களது வேலைகளை முடிப்பது அல்லது நீச்சல் அடிப்பது.. உடல் ஆரோக்கியத்திற்கான வேலைகளில் மட்டுமே ஈடுபடுவார்கள். சொல்லப் போனால் ஜப்பானியர்களுக்கு ஓய்வு என்பதே கிடையாது. அவர்கள் ஏதாவது ஒரு செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பார்கள். ஒருபோதும் சும்மாவே இருக்க மாட்டார்கள். ஓய்வு என்ற வார்த்தை அவர்களது அகராதியில் இல்லை என்றே சொல்லலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?