பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் மக்‍களும் போராட்டத்தில் குதித்தனர்

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 04:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் மக்‍களும் போராட்டத்தில் குதித்தனர்

சுருக்கம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் அந்நாட்டு அரசுக்‍கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் பாகிஸ்தானுக்‍கு ஏற்கனவே சர்வதேச அரங்கில் கடுமையான எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், கடும் அடக்‍குமுறை காரணமாக அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாண மக்‍கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்‍களும் அந்நாட்டுக்‍கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தங்கள் பகுதியில் செயல்படும் பயங்கரவாத முகாம்களுக்‍கு பாகிஸ்தான் பகிரங்க ஆதரவு அளிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அண்மைக்‍காலமாக இதுபோன்ற முகாம்கள் பெருகி வருவதாகவும், பயங்கரவாதம் உடனடியாக தடுக்‍கப்பட வேண்டும் என்றும் உள்ளூர் பகுதி மக்‍களும், தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானைக்‍ கண்டித்து கோட்லி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள், பயங்கரவாதிகளுக்‍கு புகலிடம் அளிப்பதன் மூலம் பிரச்னையைத் தீர்க்‍க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

தங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட இயக்‍கங்கள் மற்றும் தீவிரவாதிகளுக்‍கு உணவு, ரேஷன் போன்றவை வழங்கப்படுவது கண்டனத்துக்‍குரியது என்றும் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் முகாம்களால், தங்கள் வாழ்க்‍கை நரகம் போல ஆகிவிட்டது என Chinari, Mirpur, Gilgit உள்ளிட்ட பகுதிகளில் வசிக்‍கும் மக்‍கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!