அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை Replace செய்யும் கமலா ஹாரிஸ்.. இவருக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?

By Ramya s  |  First Published Jul 22, 2024, 9:18 AM IST

ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய நிலையில், ஜனநாயகக் கட்சியின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவராக கமலா ஹாரிஸ் மாறி உள்ளார். யார் இந்த கமலா ஹாரிஸ், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு குறிப்பாக சென்னைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு விரிவாக பார்க்கலாம். 


அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். கடைசியாக 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரனாரா. இந்த நிலையில் ஜோ அதிபரின் பதவிகாலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தல் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே போல் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் களமிறங்கினார். தற்போது அவருக்கு 81 வயதாகும் நிலையில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்.

Tap to resize

Latest Videos

undefined

விலகிய ஜோ பைடன்.. அதிபர் தேர்தலில் களமிறங்கும் கமலா ஹாரிஸ்.. ஓங்கும் டொனால்ட் டிரம்ப் கை!

குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் – ஜோ பைடன் இடையே நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கே தடுமாறினார். மேலும் பத்திரிகையாளர் சந்திப்பின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புடின் என்றும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை ட்ரம்ப் என்றும் தவறுதலாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த சம்பங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத்தொடங்கின. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். தனது கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காக மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Microsoft Outage | மைக்கரோசாப்ட் செயலிழப்பின் பின்னணி என்ன? வெளியிட்டது CrowdStrike!

இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவராக கமலா ஹாரிஸ் மாறி உள்ளார். யார் இந்த கமலா ஹாரிஸ், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு குறிப்பாக சென்னைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு விரிவாக பார்க்கலாம். 

கலிஃபோர்னியாவில் ஷியாமா கோபாலன் என்ற உயிரியிலாளருக்கும் பேராசிரியராக இருந்த ஜமைக்கா-அமெரிக்க தந்தையுமான டொனால்ட் ஜே ஹாரிஸுக்கு பிறந்தவர் தான் கமலா தேவி ஹாரிஸ். ஷியாமா தேவி தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். எனினும் கமலா ஹாரிஸுக்கு 7 வயதாக இருக்கும் போதே அவரின் பெற்றோர் விவாகரத்து செய்து விட்டனர். ஷியாமாவும் டொனால்ட் ஹாரிஸும் விவாகரத்து செய்த பின்னர், கமலா ஹாரிஸ் தனது தாயார் மற்றும் அவரது சகோதரியுடன் வாழ்ந்து வந்தார். ஷியாமா தனது இரண்டு மகள்களையும் தனியாகவே வளர்த்து வந்ததால் அவர் பள்ளிப்படிப்பை முடிக்க பல பள்ளிகளில் மாற வேண்டியிருந்தது. இதை தொடர்ந்து கமலா ஹாரிஸ் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.

மேலும் கமலா ஹாரிஸ் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார், பின்னர் சட்டப்படிப்பை படித்த அவர் 1990-ம் ஆண்டு பார் அசோசியேஷன் உறுப்பினரானார். அதே ஆண்டில் கலிபோர்னியாவில் துணை மாவட்ட வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார்.

2003ல் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இரண்டு முறை பதவி வகித்தார். 2017-ல் தனது மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவும் இளம் வயது அமெரிக்க செனட்டராக ஆனார்.

செனட்டில் பணியாற்றும் இரண்டாவது ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் முதல் தென்கிழக்கு ஆசியப் பெண்மணி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றார்.. வரி மற்றும் சுகாதார சீர்திருத்தங்கள், புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமை மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்களுக்கு அவர் ஆதரவு அளித்தார். 2020 ஆம் ஆண்டில், அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அமெரிக்காவின் துணை அதிபரானார். 

தனது தாய் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் தனது சிறு வயதில் அடிக்கடி சென்னைக்கு வந்து தனது தாத்தா பாட்டியுடன் கமலா ஹாரிஸ் தங்கி உள்ளார். 2020 அதிபர் தேர்தலின் போது சென்னை கடற்கரையில் தனது தாத்தாவின் கையை பிடித்து 

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஜனநாயக கட்சி வேபாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். ஒருவேளை அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டால், அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் முதல் இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார். மேலும், அவர் வெற்றி பெற்றால், முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க அதிபர் என்ற பெருமையுடன், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.

click me!