அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிய பின்னர், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஒப்புதல் அளித்தார். டொனால்ட் டிரம்ப்புடன் போட்டியிடும் ஜோ பைடனின் தகுதி குறித்து பலரும் சந்தேகங்களை கிளம்பியுள்ள நிலையில் ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸின் பின்னால் ஒன்றுபடுமாறு தனது கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜோ பைடன். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தனது கட்சியை சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். எஞ்சியிருக்கும் எனது பதவிக்காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளில் எனது முழு ஆற்றலையும் செலுத்த முடிவு செய்துள்ளேன்.
undefined
இந்த ஆண்டு கமலா ஹாரிஸ் எங்கள் கட்சியின் வேட்பாளராக வருவதற்கு இன்று நான் எனது முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்க விரும்புகிறேன். ஜனநாயகவாதிகள் - இது ஒன்று சேர்ந்து டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம். இதைச் செய்வோம்" என்று அவர் பதிவில் கூறினார்.
ஜோ பைடனின் ஒப்புதல் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், துணைத் தலைவர் ஹாரிஸ், பைடனின் ஒப்புதலைப் பெற்றதற்கு பெருமைப்படுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்னலமற்ற மற்றும் தேசபக்தி நடவடிக்கை" என்று ஜோ பைடனின் பதிவுக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன், பைடனின் "அசாதாரண தலைமைக்கு" அவர் நன்றி கூறினார்.
கமலா ஹாரிஸை ஆதரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை பைடன் அறிவித்தார். குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான முதல் அதிபர் விவாதத்தில் டிரம்புக்கு எதிராக ஈடுகொடுத்து, பேச முடியாமல் திணறினார்.
ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி அதிகாரிகளின் அழுத்தத்திற்குப் பிறகு, போட்டியிலிருந்து விலகுவதற்கான பைடனின் முடிவு வந்தது என்பது குறிப்பிடவேண்டிய தகவலாகும்.
கமலா ஹாரிஸ் குறித்தான அறிவிப்பு வெளியான நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் என்றால் எளிதில் நான் தோற்கடித்து விடுவேன்” என்று கூறியுள்ளார்.
20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!