வியாழன் கிரகத்தில் தெரியும் வினோத வடிவங்கள்! என்னடா நடக்குது அங்க? நாசா கண்டுபிடித்த புதுத் தகவல்!

By SG Balan  |  First Published Jun 30, 2024, 11:35 PM IST

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்ட பகுதியில், வியாழன் கிரகத்தின் பெரிய சிவப்புப் புள்ளிக்கு மேலே நூதன வடிவங்கள் தென்படுகின்றன.


ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியை பயன்படுத்தும் விண்வெளி விஞ்ஞானிகள் குழு வியாழனின் மேல் வளிமண்டலத்தில் இதற்கு முன் காணப்படாத வினோத வடிவங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்ட பகுதியில், வியாழன் கிரகத்தின் பெரிய சிவப்புப் புள்ளிக்கு மேலே நூதன வடிவங்கள் தென்படுகின்றன.

Tap to resize

Latest Videos

undefined

வியாழன் கிரகத்தில் காணப்படும் பெரிய சிவப்பு நிறப் பகுதி கிரேட் ரெட் ஸ்பாட் எனப்படுகிறது. இது சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய புயல் என்றும் பூமியை விட இரண்டு மடங்கு பெரிய அளவுள்ள இந்தப் புயல் குறைந்தது 300 ஆண்டுகளாக நீடித்திருக்கும் என நம்பப்படுகிறது என்றும் நாசா கூறுகிறது.

அடுத்தடுத்து நொறுங்கி விழும் பீகார் பாலங்கள்! 10 நாட்களுக்குள் 6வது சம்பவம்!

Spot check 🔴

Above Jupiter’s Great Red Spot, sunlight influences upper atmospheric structure. But Jupiter doesn’t get much sun — only 4% of what Earth does. Thinking the region “would be really boring,” scientists were in for a surprise with Webb: https://t.co/irr6Oq4BWO pic.twitter.com/GGEmEUy43N

— NASA Webb Telescope (@NASAWebb)

வியாழனின் மேல் வளிமண்டலம் அந்த கிரகத்தின் காந்தப்புலத்திற்கும் அடிப்படை வளிமண்டலத்திற்கும் இடையிலான பகுதியாகும். வியாழனின் மேல் வளிமண்டலத்தில் அதன் அரோராவைக் காணலாம். இருப்பினும், கிரகத்தின் மத்திய ரேகையை நோக்கிய மேல் வளிமண்டலப் பகுதி சூரிய ஒளியால் பாதிக்கப்படுகின்றன.

ஜூலை 2022 இல், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் நியர்-இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோகிராஃப் (NIRSpec) திறன் மூலம் வியாழனின் கிரேட் ரெட் ஸ்பாட் கண்டறியப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் இருண்ட வளைவுகள் மற்றும் பிரகாசமான புள்ளிகள் உட்பட பல்வேறு சிக்கலான கட்டமைப்புகள் தெரிவது விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி ஹென்ரிக் மெலின், "இது சுவாரஸ்யமாக இருக்கிறது. வியாழனில் ஒருபோதும் ஆச்சரியங்ககளுக்கு பஞ்சமே கிடையாது" என்று கூறியுள்ளார்.

விஞ்ஞானிகள் இந்த வடிவங்களை இன்னும் விரிவாக ஆராய்ந்து, வியாழனின் மேல் வளிமண்டலம் காலப்போக்கில் எவ்வாறு மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். இந்த கண்டுபிடிப்புகள் வியாழனின் துணைக்கோள்களான கேனிமீட், காலிஸ்டோ மற்றும் யூரோபா ஆகியவற்றை ஆய்வு செய்யும் நாசாவின் திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

செல்வமகள் திட்டம் உள்பட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அறிவிப்பு! எவ்ளோ தெரியுமா?

click me!