முதல் முறையாக நிலவின் மண் மாதிரியை பூமிக்குக் கொண்டுவந்த சீனா! விண்வெளி துறையில் புதிய சாதனை!

By SG Balan  |  First Published Jun 25, 2024, 7:49 PM IST

பூமியின் தென்துருவப் பகுதியில் இருந்து மண் மாதிரியை பூமிக்கு எடுத்து வந்த முதல் நாடு என்ற பெருமையை சீனா தன்வசமாக்கியுள்ளது. இது மனித குலத்திற்கே கிடைத்துள்ள வெற்றி என்று சீனா கூறியுள்ளது.


சீனா நிலவின் தொலைதூரப் பகுதியில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரித்து அவற்றை மீண்டும் பூமிக்குக் கொண்டு சாதனை படைத்துள்ளது. இதற்காக Chang'e-6 விண்வெளித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கும் சீனா விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மங்கோலியாவின் சிசிவாங் பேனர் பகுதியில் தயார் நிலையில் இருந்த தரையிறங்கும் பகுதியில் Chang'e-6 விண்கலத்தின் காப்ஸ்யூல் பூமியை அடைந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

விண்வெளி ஏஜென்சிகளும் தனியார் நிறுவனங்களும் நிலவில் இருக்கும் வளங்களை பூமிக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டிவரும் சூழலில் சீனாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்தத் திட்டத்தை மிகவும் வெற்றிகரமான நிறைவு செய்துள்ளது.

ஒரே நாடு ஒரே சார்ஜர்! ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் அதிரடி உத்தரவு!

A recap of 53-day Chang’e-6 lunar mission. Launch, lunar landing, sampling, ascending, and returning back to earth! Full HD:https://t.co/X8PllBJAzY pic.twitter.com/L8Vyt4vgFN

— CNSA Watcher (@CNSAWatcher)

சீன நிலவு தெய்வத்தின் பெயரைக் கொண்ட Chang'e-6 திட்டம் மே 3ஆம் தேதி தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் மாகாணத்தில் தொடங்கியது. பூமியில் இருந்து பார்க்க முடியாத நிலவின் தொலைதூர பகுதியில் ஜூன் 2ஆம் தேதி தரையிறங்கியது. அங்கிருந்துதான் நிலவின் மண் மாதிரியை எடுத்துவந்துள்ளது.

சந்திரன் தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலமும் பூமியை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலமும் ஒன்றாக இருப்பதால், பூமியில் இருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. பூமியின் தென்துருவப் பகுதி நிரந்தரமாக அறியப்படாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், சீனாவின் Chang'e-6 திட்டத்தின் லேண்டர் இரண்டு நாட்கள் சந்திரனில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பள்ளத்தாக்குகளில் ஒன்றில் இறங்கியது. 1,600 மைல் அகலமுள்ள தென் துருவ படுகையில் இருந்து பாறை மற்றும் மண்ணை ஒரு ரோபோ கையைக் கொண்டு எடுத்து சேகரித்தது. பின் மீண்டும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளது.

இதன் மூலம் பூமியின் தென்துருவப் பகுதியில் இருந்து மண் மாதிரியை பூமிக்கு எடுத்து வந்த முதல் நாடு என்ற பெருமையை சீனா தன்வசமாக்கியுள்ளது. இது மனித குலத்திற்கே கிடைத்துள்ள வெற்றி என்று சீனா கூறியுள்ளது.

அரசியலை விட்டு விலகும் எண்ணம் இல்லை! முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதி

click me!