ஜமைக்காவைச் சேர்ந்தவரும் மின்னல் மனிதர் எனஅழைக்கப்படும், தடகள வீரர் உசேன் போல்ட்டிடம் 1.20 கோடி டாலர்கள்(ரூ.98 கோடி) மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜமைக்காவைச் சேர்ந்தவரும் மின்னல் மனிதர் எனஅழைக்கப்படும், தடகள வீரர் உசேன் போல்ட்டிடம் 1.20 கோடி டாலர்கள்(ரூ.103 கோடி) மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு பங்கு முதலீட்டு நிறுவனத்தில் செய்திருந்த முதலீடு திடீரென காணவில்லை. உசேன் போல்ட் கணக்கில் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே இருக்கிறது. நீதிமன்றத்துக்கு செல்ல இருக்கிறோம் என்று உசேன் போல்ட் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் ராஜினமா செய்வதாக திடீர் அறிவிப்பு:பின்னணி என்ன?
ஜமைக்கா தடகள வீரரும், ஒலிம்பிக்கில் அதிவேகமாக ஓடி தங்கப் பதக்கங்களை வாரிக் குவித்தவருமான உசேன் போல்ட்டைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஜமைக்காவில் உள்ள தனியார் பங்கு மற்றும் பங்குபத்திரங்கள் நிறுவனத்தில் உசேன் போல்ட் முதலீடு செய்திருந்தார். அவரின் கணக்கில் இருந்து 1.20 கோடி டாலர்கள் திடீரென மாயமாகியுள்ளன.
இது குறித்து உசேன் போல்ட் வழக்கறிஞர் லின்டன் பி கார்டன் கூறுகையில் “உசேன் போல்ட் ஓய்வு காலத்துக்குப்பின் வந்த பணம், மற்றும் சேமிப்புத் தொகை ஆகியவை இந்த பங்கு முதலீட்டில் முதலீடு செய்திருந்தார். அந்தத் தொகையில் ஏறக்குறைய பெரும்பகுதி இந்த மோசடியில் பறிபோயுள்ளது.
இந்தசெய்தி உசேன் போல்டுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் வேதனைக்குரிய செய்தி. இந்த பணத்தை திரும்பக் கேட்டு நிறுவனத்தை அனுகியுள்ளோம் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர தயாராகி வருகிறோம்
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வெளியே சுமூகமாக தீர்க்கப்படும் என நம்புகிறோம்.உசேன் போல்ட்டின் பணம் அவருக்கு கிடைக்கும், அமைதியான கடைசிகால வாழ்க்கையை வாழ்வார் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்
ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரைச் சேர்ந்த பங்கு மற்றும் தரகு நிறுவனம் கடந்த 12ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “ தங்கள் நிறுவனத்தில் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது , ஏராளமான பணத்தைக் காணவில்லை” எனத் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் குறித்து ஜமைக்கா நிதி மோசடி தடுப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் உசேன் போல்ட் மட்டுமல்ல, ஏராளமான தனிமனிதர்களும் பணத்தை இழந்துள்ளனர் என்று நிதி மோசடி தடுப்புக் குழுவினர் தெரிவித்தனர்.
சொந்த மண்ணில் சிராஜ் விளையாடுவதை நேரில் பார்த்து ரசித்த குடும்பத்தினர்!
நிதிஅமைச்சர் நிகில் கிளார்க் கூறுகையில் “ மோசடியாளர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.விரைவில் மோசடியாளர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்
100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் 400மீட்டர் தொடர் ஓட்டங்களில் பல சாதனைகளை படைத்துள்ள உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 முறை தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு தடகளத்தில் இருந்து ஓய்வு பெற்ற உசேன் போல்ட் தனது ஓய்வுகாலத் தொகை, சேமிப்பு ஆகியவற்றை வைத்து வாழ்ந்து வந்தார். இப்போது அவரின் வாழ்நாள் சேமிப்பு, ஓய்வுகாலத் தொகையில் பெரும்பகுதி மோசடி செய்யப்பட்டுள்ளது.