Lucile Randon: உலகின் மிக வயதானவராகத் திகழ்ந்த 118 வயது பாட்டி மரணம்

By SG Balan  |  First Published Jan 18, 2023, 4:17 PM IST

உலகிலேயே மிக வயதானவராக இருந்த பிரான்ஸ் நாட்டு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் தனது 118வது வயதில் காலமானார்.


தெற்கு பிரான்சில் உள்ள அலெஸ் நகரில் 1904ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆந்தேதி பிறந்தவர் லூசில் ராண்டன். டூலோனில் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்த அவர் தனது 118வது வயதில் மரணம் அடைந்துள்ளார்.

லூசில் மரணம் பெற்றித் தெரிவித்துள்ள அவரது செய்தித்தொடர்பாளர் டேவிட் டவெல்லா, லூசில் ராண்டன் அவர்களின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது என்று கூறியுள்ளார். லூசில் தன் அன்பு தம்பியுடன் சேர்ந்து இருக்கவேண்டும் என ஆசைப்பட்டார் எனவும் டவெல்லா தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டிசை சேர்ந்த கேன் டனாசா 119 வயதான இறந்தார். அவருக்குப் பின் உலகின் வயதான நபராக லூசில் ராண்டன் இருந்துவந்தார். 19 வயதில் கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாறினார். அடுத்த 8 ஆண்டுகளில் கன்னியாஸ்திரி ஆனார்.

Microsoft Layoffs 2023: 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

ஆசிரியராகவும் பணியாற்றிய லூசில் ராண்டன் சகோதரி ஆண்ட்ரே என்றும் அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஒரு மருத்துவமனையில் செவிலியராகச் சேர்ந்தார். 28 ஆண்டுகள் அனாதைகள் மற்றும் முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்தார்.

2020ஆம் ஆண்டு லூசில் ராண்டன், ஒரு வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில், “நான் இவ்வளவு காலம் எப்படி வாழ்ந்தேன் என்ற ரகசியம் எனக்குத் தெரியவில்லை. இதற்கான பதிலை கடவுள்தான் வழங்க முடியும்” என்று தெரிவித்தார்.

click me!