Israel Hamas War : காசா பகுதியில் உள்ள மிகப் பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் "போர்க்குற்றங்களாக கருதப்படலாம்" என்று ஐநா மனித உரிமைகள் அலுவலகம் நேற்று புதன்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள சுகாதார அமைச்சின்படி, இஸ்ரேலிய தாக்குதல்கள் இரண்டு நாட்களில், இரண்டு முறை ஜபாலியா அகதிகள் முகாமை குறிவைத்து 10க்கும் மேற்பட்டவர்களை கொன்று, பலரை காயப்படுத்தியுள்ளன. மேலும் ஹமாஸின் உயர்மட்ட தளபதி இப்ராஹிம் பியாரி மீது செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றி எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
"ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான விகிதாசார தாக்குதல்கள் என்பதில் நாங்கள் தீவிர அக்கறை கொண்டுள்ளோம்" என்று UN தனது ட்விட்டரில் எழுதியுள்ளது.
இந்தியர்கள் ஹமாஸுக்கு எதிராக நிற்க வேண்டும்! ஹமாஸ் தலைவரின் மகன் மொசாப் கோரிக்கை
காஸாவின் வரலாற்றில் மிக மோசமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் படைகள் தற்போது இடைவிடாமல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஹமாஸ் ஆயுததாரிகள் அக்டோபர் 7 அன்று காசாவில் இருந்து எல்லைக்குள் நுழைந்து 1,400 பேரைக் கொன்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் மற்றும் 230க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் அடங்குவர்.
ஹமாஸ் நடத்தும் காஸாவின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஹமாஸ் தாக்குதலுக்கு, இஸ்ரேலின் பதிலடி குண்டுவெடிப்பு சம்பவங்களில் 8,796 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதில் அடங்குவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பொலிவியா இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தது. ஜோர்டான் இஸ்ரேலுக்கான தனது தூதரை "காசாவில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய போரை கண்டிப்பதற்காக" திரும்ப அழைத்துள்ளது போன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றது.
மனிதநேயத்தை வெறுப்பவர் ஜார்ஜ் சொரோஸ்: எலான் மஸ்க் காட்டம்!
ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், "அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட ஜபாலியா அகதிகள் முகாமின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பாலஸ்தீனியர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டது உட்பட அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார" என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D