Singapore News : சிங்கப்பூரில் 44 வயதான ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக, தன்னுடன் ஒரே இடத்தில் பணிசெய்யும் இளைய பெண் சக ஊழியரின் Up-Skirt படங்களை பல முறை எடுத்துள்ளார்.
Up-Skirt படங்கள் என்பது, குட்டையான ஆடை அணிந்தது பெண்கள் சில சமயம் நடந்து செல்லும்போது, கீழாடையை படமெடுப்பது தான். இது போன்ற கேவலமான செயலில் ஈடுபட்ட அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அந்த நபர், அப்பெண்ணை ஒரு தலையாக காதலிப்பதாக கூறினார் என்று போலீசார் தெரிவித்தனர்.
கருப்பு ஆடு சிக்கியது எப்படி?
அந்த பள்ளியில் நடந்த ஒரு தேர்வின் போது, அந்த 28 வயது பெண் ஆசிரியையின் Up-Skirt படங்களை அந்த நபர் எடுப்பதை பிரைமரி 6 பயிலும் மாணவர் ஒருவர் பார்த்துள்ளார். அந்த மாணவன் அளித்த புகாரில் தான் அந்த நபர் மீது வோயூரிசம் மற்றும் Computer Misuse Act சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த அக்டோபர் 30, 2023 அன்று அவருக்கு ஆறு வார சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
சோகத்தில் முடிந்த மருத்துவ சாதனை!பன்றி இதயம் பொருத்தப்பட்ட முதியவர் 40 நாளில் உயிரிழப்பு
கைதான அந்த நபர் கடந்த 2020 முதல் ஆரம்பப் பள்ளியில் கற்பித்து வருவதாக நீதிமன்ற அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் கடந்த ஜூலை 4, 2021 அன்று, பாதிக்கப்பட்ட பெண், தனது வகுப்பறையில் இசை கற்பித்துக் கொண்டிருந்தபோது, அந்த நபர் தனது கணித வகுப்பிற்குத் தயாராக காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண், தனது மாணவர்களுடன் ஆர்வமாக பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அந்த நபர் தனது தொலைபேசியைப் பதுக்கி வைத்து, ரகசியமாக அப்பெண்ணின் Up-Skirt படங்களை எடுத்துள்ளார். மேலும் ஸ்டாப் ரூமில் அந்த பெண் இருந்தபோது, அந்த பெண் அசந்தே நேரத்தில் அவருடைய செல் போனின் இருந்து தனக்கு மெசேஜ் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் ஹமாஸுக்கு எதிராக நிற்க வேண்டும்! ஹமாஸ் தலைவரின் மகன் மொசாப் கோரிக்கை
சோதனை செய்த போலீசார்
விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் 29, 2021 அன்று ஆண் ஆசிரியரின் தொலைபேசியை போலீஸார் கைப்பற்றினர். பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்கள் அந்த சாதனத்தில் சேமிக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். கூடுதலாக, போலீசார் அந்த நபரின் மடிக்கணினியை சோதனையிட்டனர், மேலும் அவர் ஆகஸ்ட் 20, 2020 முதல் செப். 17, 2021 வரையிலான காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவரைப் பணியகத்தில் ரகசியமாகப் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டறிந்தனர். இந்த வழக்கு ஓராண்டாக நடந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு தீர்ப்பிடப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D