10 மாத இரட்டைக் குழந்தைகளைக் காப்பாற்ற தங்கள் உயிரை தியாகம் செய்த இஸ்ரேல் தம்பதி.. நெகிழ்ச்சி சம்பவம்..

By Ramya s  |  First Published Oct 13, 2023, 1:52 PM IST

ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய தம்பதியினர் தங்களுடைய 10 மாத இரட்டைக் குழந்தைகளை மறைவிடத்தில் மறைத்து வைத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு இஸ்ரேலில் உள்ள தங்கள் வீட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடிய 30 வயதான Itay மற்றும் Hadar Berdichevsky இருவரும் கொல்லப்பட்டனர். எனினும் ஹமாஸ் தீவிரவாதிகள் தங்கள் வீட்டில் நுழைவதற்கு முன்பு தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வீட்டில் உள்ள மறைவிடத்தில் மறைத்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சைப்ரஸில் உள்ள இஸ்ரேலின் துணை தூதர் ரோட்டெம் செகேவ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் " Itay மற்றும் Hadar Berdichevsky, 30 வயது. இவர்கள் 10 மாத இரட்டைக் குழந்தைகளை தங்குமிடத்தில் மறைத்து வைத்தனர், அதே நேரத்தில் பயங்கரவாதிகள் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தனர். தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குழந்தைகள் மீட்கப்படும் வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக தனியாக விடப்பட்டனர். இந்த பயங்கரத்தை கற்பனை செய்து பாருங்கள். இப்போது அனாதையாக இருக்கும் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற இரண்டு பயந்த பெற்றோர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். இந்த மாவீரர்களின் நினைவால் கு ஆசீர்வதிக்கப்படட்டும். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Itay and Hadar Berdichevsky, 30 years old. They hid the ten-month-old twins in the shelter while terrorists broke into their home. They were brutally murdered after fighting fiercely with the terrorists. The babies were left alone for over 12 hours until they were rescued.… pic.twitter.com/QrNHC2Y7d3

— Rotem Segev (@RotemSegev)

 

காஸாவிலிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள கிபுட்ஸ் என்ற இடத்தில் உள்ள கஃபர் காஸாவில் உள்ள தங்கள் வீட்டில் இட்டாய் மற்றும் ஹதர் பெர்டிசெவ்ஸ்கி தாக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதற்கு முன்பு, தங்களின் 10 மாத இரட்டைக் குழந்தைகளை ஒரு தங்குமிடத்தில் மறைத்து வைத்தார்கள். 12 மணி நேரத்திற்கும் மேலாக மறைவிடத்தில் இருந்த குழந்தைகள் இஸ்ரேலிய படைகளால் காயமின்றி மீட்கப்பட்டு பின்னர் அவர்களின் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இஸ்ரேல் ராணுவ தளத்தின் மீது நடுங்க வைக்கும் பயங்கர தாக்குதல்; வீடியோவை வெளியிட்ட ஹமாஸ் தீவிரவாதிகள்!!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் பின்னணி :

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே, நூறாண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் அங்கு குண்டுவெடிப்புகள், ஏவுகணை தாக்குதல், துப்பாக்கி சூடு சம்பவங்களும் அன்றாட நிகழ்வாகிவிட்டன. எனினும் 2021-ம் ஆண்டு, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்த 11 நாள் போருக்கு பிறகு பெரியளவில் எந்த மோதல்களும் நடக்கவில்லை. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வரும் நிலையில் அங்கு போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 1200-க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஹமாஸ் தீவிரவாதிகள் வேரோடு அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை முதல், இஸ்ரேல் காசா பகுதியில் நூற்றுக்கணக்கான கொடிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்குப் பல முன்னாள் வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரும் ஆதரவு தெரிவித்து போரிட்டு வருகின்றனர்.

இஸ்ரேஸ் பாலஸ்தீனம் இடையே உள்ள காசா பகுதி ஹமாஸ் குழுவினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து காசாவை கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. மேலும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இல்லை என்றும் போராளிகள் குழு என்று பாலஸ்தீனம் கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!