ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம் : பொதுமக்‍கள் 60 பேரை ​கொன்று மின்கம்பத்தில் தொங்கவிட்ட கொடூரம்!

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 06:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம் : பொதுமக்‍கள் 60 பேரை ​கொன்று  மின்கம்பத்தில் தொங்கவிட்ட கொடூரம்!

சுருக்கம்

மொசூல் நகரை கைப்பற்றும் முயற்சியில் ஈராக்‍ ராணுவம் அந்நகரை நோக்‍கி முன்னேறி வரும் நிலையில், பொதுமக்‍கள் 60 பேரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமாகக்‍ கொன்று அவர்களின் உடல்களை மின்கம்பத்தில் தொங்கிவிட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஈராக்‍ மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் ஆதிக்கம்​செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், பல்வேறு நாசவேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக்‍ நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்‍கு எதிராக ஈராக்‍ ராணுவம் அமெரிக்‍க கூட்டுப்படையுடன் இணைந்து அதிரடி தாக்‍குதல் நடத்தி, பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்‍கிய நகரான மொசூல் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில், ஈராக்‍ ராணுவம் கடந்த சில நாட்களாக அங்கு அதிக அளவில் தாக்‍குதல் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், மொசூல் நகர் அருகேயுள்ள Tiba கிராமத்திற்குள் புகுந்த ராணுவம், அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மூடியுள்ள பல வீடுகளையும் கதவை உடைத்து ராணுவம் சோதனை செய்து வருகிறது.

இதனிடையே, துரோகம் செய்ததாகவும், ஈராக்‍ ராணுவத்திற்கு உதவி செய்ததாகவும் கூறி, ஐ.எஸ். தீவிரவாதிகள், பொதுமக்‍கள் 40 பேரை கொடூரமாக கொலை செய்து, மின்கம்பத்தில் 

தொங்கவிட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிக்‍கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

USA Lifestyle: அமெரிக்காவுல வீதிக்கு வந்தா ஏன் ஆளையே காணோம்? அவங்க என்னதான் பண்ணுவாங்க?
One Kidney Village: சாப்பாட்டுக்காக கிட்னியை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்... இதுதான் காரணம்!