சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சிறையில் அடைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும், உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு முடிந்து, சீனா திரும்பிய ஜின் ஜின்பிங்கை அந்நாட்டு ராணுவம் கைது செய்து வீட்டுச் சிறையில் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி பெருபாலான சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சீன மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அதிபர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங்கை நீக்கிவிட்டு, ஆட்சியை தன் கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், ஜெனரல் லி கியாமிங்கின் பெயரும் பெரிதும் அடிபடுகிறது. தற்போது சீன அதிபர் லீ கியாமிங் சீனாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 16ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் sco மாநாடு முடிந்து பெய்ஜிங் வந்த போது அவரை விமான நிலையத்தில் வைத்தே நுழைய அனுமதி மறுத்து, வீட்டுக் காவலில் வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. அதுக்குன்னு இப்படியா பண்றது ? அதிர்ச்சி சம்பவம்
military vehicles heading to on Sep 22. Starting from Huanlai County near Beijing & ending in Zhangjiakou City, Hebei Province, entire procession as long as 80 KM. Meanwhile, rumor has it that was under arrest after seniors removed him as head of PLA pic.twitter.com/hODcknQMhE
— Jennifer Zeng 曾錚 (@jenniferatntd)சீனா மக்கள் சில பெய்ஜிங் வெளிப்பகுதிகளில் தென்படும் ராணுவ வாகனங்களைக் காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது வரை, அத்தகைய செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. சர்வதேச பத்திரிகையாளர்கள் இது வெறும் வதந்தி என கூறுகின்றனர். ஜி ஜின்பிங்கிற்கு கடந்த சில நாட்களாக எதிர்ப்பு கிளம்பி வருவதால், அவரை கைது செய்வது குறித்து பல தகவல்கள் பரவி வருகிறது. எனினும், பீஜிங்கில் விமானங்கள் ரத்து தொடர்பான காரணம் தெரியவில்லை.
சமீபத்தில், அவரது எதிரியாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராணுவ சதி காரணமாக தற்போது ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜி ஜின்பிங் உண்மையிலேயே கைது செய்யப்பட்டால் சீன பொருளாதாரம் தலைகீழாக மாறும் என்று ஆருடம் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பெய்ஜிங்கை நோக்கி ராணுவம் சென்று கொண்டிருப்பதாக காணொளி ஒன்று வெளியாகி இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா ?? பாஜகவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் !