சீனாவில் ஊழியர்களை கண்காணிக்க கழிப்பறைகளில் கேமராக்கள் பொருத்தியதாக நிறுவனத்தின் முதலாளியை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.
சீனாவில் ஊழியர்களை கண்காணிக்க கழிப்பறைகளில் கேமராக்கள் பொருத்தியதாக நிறுவனத்தின் முதலாளியை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். தென்கிழக்கு சீனாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம், குளியலறையில் சிசிடிவியை நிறுவி, இடைவேளையின் போது தொலைபேசி பயன்பாடு மற்றும் புகைபிடிப்பதைக் கண்காணித்துள்ளது. இந்த நிலையில் ஊழியர்கள் கழிப்பறையில் புகைப்பிடித்துக்கொண்டு செல்போன் பயன்படுத்தும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்தது.
இதையும் படிங்க: அட்ரா சக்க !! சவூதி அரேபியா இனி சொர்க்க பூமி தான்.. கண்டறியப்பட்ட மிகப்பெரிய தங்க சுரங்கம்..
அதில் மூன்று பேர் கழிவறையில் அமர்ந்து புகைபிடித்தபடியும், தங்கள் செல்போன்களைப் பயன்படுத்திய போதும் சிக்கியுள்ளனர். இதுக்குறித்து நிறுவனத்திடம் கேட்ட போது, நிறுவனத்தின் கொள்கைகளை மீறுவது குறித்து மற்ற ஊழியர்களை எச்சரிக்க நிறுவனம் படங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் புகைப்படங்கள் பிரைவைசியை பாதிப்பதாகவும் பலர் இது சீனாவில் "பிக் பிரதர்" கண்காணிப்புக்கு மற்றொரு உதாரணம் என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: உக்ரைன், ரஷ்யா இடையே அமைதியை ஏற்படுத்த பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்... ஐ.நா.வில் மெக்சிகோ வலியுறுத்தல்!!
மேலும் ஒருவர், கண்காணிப்பு கேமராக்களை தவறாக பயன்படுத்தியதற்காக நிறுவனம் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மற்றொருவர், அவர்கள் மனிதர்களை சிறிதும் மரியாதை மற்றும் மனிதநேயம் இல்லாமல் விலங்குகளைப் போல நடத்துகிறார்கள் என்று தெரிவித்தார். இதனிடையே கேமராவில் சிக்கிய இருவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது, மற்றவர் தனது மாதாந்திர போனஸை இழந்ததுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.